முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒரு நாள்: பாக்., வெற்றி

வெள்ளிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

ஹராரே, ஆக. 31 - ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகி ஸ்தான் அணி 90 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி தரப்பில், மொகமது ஹபீஸ் சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அவருக்குப் பக்கபலமாக நசீர் ஜாம்ஷெட், உமர் அமின், சாகித் அப்ரி டி ஆகியோர் ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, ஜூனைத்கான், அப்துர் ரெஹ்மான், மொகமது இர்பான், மற்றும் சயீத் அஜ்மல் ஆகி யோர் அடங்கிய கூட்டணி சிறப்பாக பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தந் தது. 

ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்க ப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற் கு 299 ரன்னை எடுத்தது. 

பாகிஸ்தான் அணி தரப்பில் மொகமது ஹபீஸ் சதம் அடித்தது ஆட்டத்தின் சிற ப்பம்சமாகும். அவர் 130 பந்தில் 136 ரன் னை  எடுத்து இறுதிவரை ஆட்டம் இழ க்காமல் இருந்தார். இதில் 9 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் அடக்கம். தவிர, நசீர் ஜாம்ஷெட் 32 ரன்னையும், உமர் அமின் 59 ரன்னையும், சாகித் அப்ரிடி 39 ரன் னையும் எடுத்தனர். 

ஜிம்பாப்வே அணி சார்பில், விடோரி 68 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடு த்தார். தவிர, உத்செயா 1 விக்கெட் எடு த்தார். 

ஜிம்பாப்வே அணி 300 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை பாக். அணி வைத்தது. ஆனா ல் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 42.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையு ம் இழந்து 209 ரன்னை மட்டுமே எடுத் தது. 

இதனால் இந்தப் போட்டியில் பாகிஸ் தான் அணி 90 ரன் வித்தியாசத்தில் வெ ற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டி கள் கொண்ட இந்தத் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனாகியுள்ளது. 

ஜிம்பாப்வே அணி தரப்பில் கேப்டன் டெய்லர் அதிகபட்சமாக, 95 பந்தில் 79 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, வாலர் 40 ரன்னையும், மசகட்ஜா 24 ரன்னையு ம், வில்லியம்ஸ் 37 ரன்னையும் எடுத் தனர். 

பாகிஸ்தான் அணி சார்பில், ஜூனைத் கான் 15 ரன்னைக் கொடுத்து 4 விக்கெ ட் எடுத்தார். தவிர, அப்துர் ரெஹ்மான் மற்றும் சயீத் அஜ்மல் தலா 2 விக்கெட்டும், மொகமது இர்பான் 1 விக்கெட்டு ம் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக மொகமது ஹபீஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago