முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்கொலைப் படை தாக்குதல்: ஈராக்கில் 40 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

பாக்தாத், செப்.13 - ஈராக்கில்  தற்கொலைப் படை தாக்கியதில் 40 பேர் உடல் சிதறி இறந்தனர். ஈராக்கில் சன்னி, ஷியா முஸ்லிம் பிரிவினரிடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. இரு தரப்பினரும் பல இடங்களில் குண்டுகளை வெடித்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதில் சன்னி பிரிவினர் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் ஆனதிலிருந்து தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பாக்தாத் நகரின் வடக்குப் பகுதியில் உள்ள வாஷ்ரியாக் மசூதியில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர். அப்போது திடீரென குண்டு வெடித்தது. இதில் 30 பர் உடல் சிதறி உயிரிழந்தனர். 55 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்துள்ள சன்னி பிரிவை சேர்ந்தவர்கள் தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பாக்தாத்தில் நேற்று முன் தினம் மட்டும் ஒரே நாளில் பல இடங்களில் குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில்10 பேர் உயிரிழந்தனர். ஆக மொத்தம் இதுவரை 40 பேர் இறந்துள்ளனர். இதுவரை நடந்துள்ள வன்முறையில் 4 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்