முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். சூதாட்ட விசாரணை: குழு அமைக்க பரிந்துரை

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,அக்.8 - ஐ.பி.எல்.சூதாட்டம் குறித்து விசாரணை செய்ய 3 பேர் கொண்டு குழு ஒன்றை அமைக்கும்படி சுப்ரீம்கோர்ட்டு பரிந்துரை செய்துள்ளது. 

ஐ.பி.எல். ஸ்பாட் பிக்ஸிங் சூதாட்டம் குறித்து கிரிக்கெட் வாரியம் அமைத்த குழு சட்ட விரோதமானது என்று மும்பை ஐகோர்ட்டு கடந்த ஜூலை 30_ம் தேதி அறிவித்தது. இந்த குழு சென்னை அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜூ குந்த்ரா ஆகியோரை நிரபராதிகள் என்றும் அவர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்தது. இதை எதிர்த்து பீகார் கிரிக்கெட் சங்கம் தொடர்ந்த வழக்கில்தான் கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை குழு சட்டவிரோதமானது என்று மும்பை கோர்ட்டு அறிவித்தது. இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியம்,பீகார் கிரிக்கெட் சங்கம் தொடர்ந்த வழக்குகள் சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வருகிறது. நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், சே.எஸ். கேகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைக்க நீதிபதிகள் பரிந்துரைத்தனர். பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி முகல் முட்கல் தலைமையில் சீனியர் வக்கீலும் கூடுதல் சொலிசிட்டருமான நாகேஸ்வரவாவ், அசாம் கிரிக்கெட் சங்க உறுப்பினர் நிலாய் தத்தா ஆகியோர் கொண்ட 3 பேர் குழுவை சுப்ரீம்கோர்ட்டு பரிந்துரைத்துள்ளது. ஐ.பி.எல். ஸ்பாட் பிக்ஸிங் குறித்து விசாரிக்க அருண்ஜெட்லி, நிலாய் தத்தா ஆகியோர்களை கொண்ட சிறப்புக்குழுவை நியமிக்க இருப்பதாக கிரிக்கெட் வாரியம் முன்னதாக தெரிவித்த கோரிக்கையை சுப்ரீம்கோர்ட்டு நிராகரித்தது. சுப்ரீம்கோர்ட்டு பரிந்துரைத்தவர்களை கொண்டு விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த புதிய உத்தரவு கிரிக்கெட் வாரிய தலைவர் சீனிவாசனுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவர் தலைவர் பதவியை பொறுப்பு ஏற்றுக்கொள்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்