முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானில் புகை பிடித்தால் வேலை இல்லை: அரசு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

ஜெய்ப்பூர், நவ.9 - ராஜஸ்தான் மாநிலத்தில் புகை பிடித்தால்  அரசு வேலை தர மாட்டோம்  என்று அந்த மாநில அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. ராஜஸ்தானில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இதனால் ஆ ளும் காங்கிரஸ் கட்சி மக்களைக் கவரும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தேர்தல் நடத்தை  விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக காங்கிரஸ் அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது.

குட்கா, புகையிலை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் வகையில் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரசு வேலையில் சேருபவர்கள் புகை பிடிக்க மாட்டேன் என்ற உறுதிமொழியைத் தர  வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை அனைத்துத் துறைகள் கலெக்டர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் இதை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனத் நடவடிக்கை மூலம் அரசுப் பணியில் சேரும் இளைஞர்களிடம் புகை பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க முடியும் என்று கருதப்படுகிறது. 

ராஜஸ்தான் மாநில அரசின் இந்த முடிவுக்கு புகையிலை எதிர்ப்பாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

     

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்