முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரடோனாவுக்கு சமமானவர் சச்சின்: கங்குலி புகழாரம்

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, நவ. 19 - கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கரை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி வெகுவாக புகழ்ந்துள்ளார். 

கால்பந்து ஜாம்பவான் மரடோனாவுக்கு சமமானவர் சச்சின் என்று கொல்கத்தா வீரரான கங்குலி அவரை பாராட்டி இருக்கிறார். 

இது குறித்து கங்குலி தெரிவித்ததாவது _ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சகாப்தமான சச்சின் டெண்டுல்கரை கால்பந்து ஜாம்பவான் மரடோனாவுடன் மட்டுமே ஒப்பிட முடியும். 

எனக்கு மிகவும் பிடித்த மரடோனாவுக்கு அவர் சமமானவர். இருவருமே மிகப் பெரிய மேதைகள். கால்பந்தில் எப்படி மரடோனாவோ? அப்படி தான் கிரிக்கெட்டில் சச்சின். 

அவரதுகடைசி இன்னிங்ஸ் மிகவும் சிறப்பாக இருந்தது. அவரது பிரிவுபச்சார பேச்சும் அனைவரையும் நெகிழ வைத்தது. அவர் தனது உரையில் எனது பெயர் , டிராவிட் , லட்சுமண் ஆகியோரை குறிப்பிட்டார். 

இது எனக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன். கிரிக்கெட்டுக்கு வெளியே அவருடன் எனக்கு தொடர்பு உண்டு. 

சச்சின் இல்லாத கிரிக்கெட் தொடக்க வீரர் ஹெல்மட் இல்லாதது போல இருக்கும். 1992 ம் ஆண்டு  பெர்த் டெஸ்டில் அவர் அடித்த சதம் எனக்கு பிடித்த ஒன்றாகும். 

ஒரு நாள் போட்டியைப் பொறுத்தவரை 2003_ம் ஆண்டு உலகக் கோப்பையில் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடியது சிறப்பானதாகும். 

மும்பையில் ஆடியகடைசி ஆட்டமும் சிறந்ததாக இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் அவரது சிறந்த இன்னிங்சாக கடைசி போட்டி இருந்தது. இவ்வாறு கங்குலி கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்