முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட்டில் 300-வது விக்கெட்டை சாய்த்தார் ஜாகீர் கான்

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

கேப்டவுன், டிச. 23 - இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கான் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 300-வது விக்கெட்டை இன்று வீழ்த்தினார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில், காலிஸ் விக்கெட்டை வீழ்த்தியபோது, அவர் இந்த மைல்கல் சாதனையை எட்டினார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களில், டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெறும் 4-வது வீரராக ஜாகீர் கான் திகழ்கிறார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த முதல் போட்டி, ஜாகீர் கானுக்கு 89-வது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை 295 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த அவர், முதல் இன்னிங்ஸ்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில், ஜாகீர் கான் இப்போது 4-வது இடத்தில் உள்ளார்.

இந்தப் பட்டியலில், அணில் கும்ப்ளே 619 (132 போட்டிகள்) விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், கபில் தேவ் 434 (131 போட்டிகள்) விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும், ஹர்பஜன் சிங் 413 (101 போட்டிகள்) விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago