முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீ விபத்து: 6 பேரை காப்பாற்றிய 8 வயது சிறுவன் பலி

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், ஜன. 25 - அமெரிக்காவில் ஏற்பட்ட தீவிபத்தில்  8 வயது சிறுவன் 6 பேரை காப்பாற்றி வீரதீரசெயல் புரிந்துள்ளான். இறுதியில் அவன் தீயில் கருகி பலியானான். 

அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள கிழக்கு ரோசெஸ்டர் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் டைலர் தூகன். இவன் பென்பீல்டு நகரில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தான். 

அந்த வீட்டில் நடமாடும் படுக்கை அறை உள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன் இரவு அந்த படுக்கை அறையில் திடீரென தீப்பிடித்தது. 

உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே டைலர் தூகன் அதிவிரைவாக செயல்பட்டான். 

எரிந்து கொண்டிருந்த நெருப்புக்குள் பாய்ந்து சென்றான். தீயில்சிக்கியிருந்த 6 பேரை பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து வந்தான். 

அவர்களில் 2 பேர் குழந்தைகள். அவர்களின் வயது தலா 4 மற்றும் 6 ஆகும். ஆனால் அவனது தாத்தா மட்டும் தீயில் சிக்கி கொண்டார். 

உடல் ஊனமுற்று இருந்ததால் படுக்கை யில் இருந்து எழுந்து அவரால் வெளியே வர முடியவில்லை. எனவே தாத்தாவை தூக்கிக் கொண்டு வெளியே வர முயன்ற போது புகை மூட்டம் மற்றும் தீயில் சிக்கினான். 

இதனால் உடல் கருகி பரிதாபமாக இறந்தான். சிறிய வயதில் 6 பேரை காப்பாற்றிய சிறுவன் டைலர் தூகனின் வீர தீர செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள். 

அதே நேரத்தில் அவன் மரணம் அடைந்ததற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து உள்ளனர். 

தூகன் இறுதிச் சடங்குக்கும் அவனது குடும்பத்தினருக்கு உதவும் வகையிலும் ஆன் லைனில் நிதி திரட்டுகின்றனர். இதுவரை ரூ. 17 லட்சம் நிதி சேர்ந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago