முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெறும்: கெஜ்ரிவால்

ஞாயிற்றுக்கிழமை, 2 மார்ச் 2014      இந்தியா
Image Unavailable

 

கான்பூர், மார்ச்,3 - விரைவில் நடைபெற உள்ள நாடாளு மன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 100  தொகுதிகளில் வெற்றிபெறும். எனவே  டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆதரவு இல்லாமல் வேறு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் கூறினார். கான்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: 

     நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். எங்களது ஆதரவு இல்லாமல் புதிய அரசு அமையாது. குஜராத் முதல்வர் மோடி பற்றி நான் கூறும் புகார்களுக்கு மோடி பதிலளிக்காமல்  மவுனம் சாதிக்கிறார். அது ஏன் என்று புரியவி ல்லை. குஜராத்தில் அற்புத வளர்ச்சி  ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். எனவே அந்த மாநிலத்துக்கு நான் அடுத்த மாதம் செல்ல இருக்கிறேன். 

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 100 கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. இங்கு மாயாவதி கட்சிக்கு ஆதரவு அளிக்காதீர்கள். அவருக்கு நீங்கள்  அளி்க்கும் வாக்கு மோடிக்குத்தான் போய்ச் சேரும். இங்கு இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் கூடியுள்ளீர்கள். விஷம் கலந்த அந்த மாதிரி கட்சிகளின் பிடிகளில் சிக்கி விடாதீர்கள்.   

டெல்லியில்  இனிமேல் அமைவது உங்கள் அரசுதான். ஆம் ஆத்மி கட்சி 100 இடங்களில் வெற்றிபெறும். எனவே எங்களது ஆதரவு புதிய ஆட்சிக்கு  தேவை. நாங்கள் இல்லாமல் புதிய அரசு அமையாது. புதிய அரசுக்கு நாங்கள் ஆதரவு தருவோம். அதன்மூலம் உங்கள் புதிய அரசு டெல்லியில் அமையும். எங்களது ஆதரவு மூலம் நாட்டின்  முகத்தை மாற்றிக் காட்டுவோம். 

விலைவாசி உயர்வு  உள்ளிட்ட எந்த பிரச்னைகளிலும் முந்தைய அரசு கவனம் செலுத்தவில்லை. நாங்கள் ஆ தரவு அளி்க்கும் கட்சியே டெல்லியில் ஆட்சி அமைக்க முடியும் என்று  கெஜ்ரிவால் பேசினார்.                                               

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago