முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வார்னரின் அதிரடியால் ஐதராபாத் திரில் வெற்றி: 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது பஞ்சாப்

செவ்வாய்க்கிழமை, 12 மே 2015      விளையாட்டு
Image Unavailable

ஐதராபாத் - டேவிட் வார்னர் அதரடி விளாசலால் 5 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சன் ரைசா்ஸ் ஐதராபாத் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக களம் இறங்கிய டேவிட் வார்னரும், ஷிகர் தவானும் அதிரடியாக ஆடினர்.

24 ரன்களில் ஷிகர் தவான் வெளியேற மறு முனையில் நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடிய வார்னர் பஞ்சாப் வீரர்களின் பந்து வீச்சை பவுண்டரிகளாகவும், சிக்சர்களாகவும், விளாசினார். வார்னருக்கு ஜோடியாக ஹென்ரிக்சும் அதிரடி காட்ட ஐதராபாத் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 28 ரன்களில் விக்கெட்டை இழந்து ஹென்ரிக்ஸ் வெளியேறினார். ஹென்ரிக்ஸ் வெளியேற, வார்னருடன் மோர்கன் இணைந்தார். தன் பங்குக்கு 7 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்து மோர்கன் பவிலியன் திரும்ப, வார்னர் விக்கெட்டை வீழ்த்த பஞ்சாப் வீரர்கள் வகுத்த வியூகம் பலிக்கவில்லை.

ஒரு கட்டத்தில் 52 பந்துகளில் 81 ரன்கள் குவித்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்த திருப்தியுடன் வார்னர் ஹென்ட்ரிக்ஸ் பந்தில் குர் கீரத்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் பவிலியன் திரும்ப, 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. இதையடுத்து 186 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களம் இறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள், முரளி விஜய் 24 ரன்களிலும், வோரா 20 ரன்களிலும் வெளியேற விருத்திமான் சாகா 5 ரன்களிலும், மேகஸ்வெல் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஆனால் அடுத்து மில்லர் களம் இறங்கியவுடன் ஆட்டத்தில் அனல் பறந்து விறுவிறுப்பைக் கூட்டியது. மில்லருக்கு ஈடுகொடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் அளவிற்கு மற்ற வீரர்கள் விளையாடாமல் வந்த வேகத்தில் பவிலியன் திரும்பினர். பரபரப்பான இறுதி கட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு பஞ்சாப் அணி 180 ரன்கள் சேர்த்தது. மில்லர் 44 பந்துகளில் 89 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ரன் குவிப்பு வீணானது. இதன் மூலம் ஐதராபாத் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 81 ரன்கள் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்ட டேவிட் வார்னர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து