முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்: சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை

செவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், சென்னை சூப்பர் கிங்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழு தீர்ப்பு அளித்தது.  மேலும், ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதித்தது. சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 3 பேர் அடங்கிய குழு, இந்த தண்டனை விவரத்தை நேற்று அறிவித்தது.

இந்தத் தடை காரணமாக, அடுத்த இரண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் விளையாட முடியாது.  பிசிசிஐ தொடர்பான கிரிக்கெட் போட்டிகள், விவகாரங்கள் தொடர்பாக குருநாத் மெய்யப்பன், மற்றும் ராஜ் குந்த்ரா ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு கிரிக்கெட் விவகாரத்திலும் ஈடுபட இருவருக்கும் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பின் செயல்முறை பகுதியை வாசித்த நீதிபதி, மெய்யப்பன் செயல்பாடுகள் பற்றி கூறும்போது, அவர் ஊழல்-தடுப்பு விதிமுறைகளை கடுமையாக மீறியுள்ளார். ஐபிஎல் செயல்முறை விதிகளை மீறியுள்ளார். ஒரு அணியின் அதிகாரியாக, விளையாட்டில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை குருநாத் மெய்யப்பன் கடைபிடிக்கவில்லை என்றார். மேலும், குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ரூ.60 லட்சம் இழந்திருக்கிறார். இது மிகவும் பயங்கரமான சூதாட்டப் பழக்கத்தை எடுத்துக் காட்டுகிறது. அவர் தனது 40 வயதில், தான் செய்யும் செயல்களின் விளைவுகள் பற்றி அறியவில்லை என்றும், ஆட்டத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம் தனக்கு தெரியாது என்றும் கூறலாகாது. 

அதே போல் ராஜஸ்தான் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ரா மீதான தடை உத்தரவு பற்றி கூறும்போது, குந்த்ரா தான் பிரிட்டன் குடிமகன் என்கிறார். மேலும் சூதாட்டம் இங்கு சட்டவிரோதமானது என்று தனக்கு தெரியாது என்று கூறுவதை ஏற்க முடியாது. உண்மையில் ஆட்டத்தை நேசிப்பவராக அவர் இருந்தால் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.  மேலும், இத்தீர்ப்பில், குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா செய்த தவறுகள், விதிமீறல்கள் பிசிசிஐ-யின் மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் தவறுகள் இவர்களுடன் மட்டும் நின்று போய் விடுவதில்லை என்பதால் இவர்கள் சார்ந்த அணியையும் அதன் உரிமையாளரையும் தடை செய்ய வேண்டியுள்ளது. என்று தெரிவித்துள்ளார். ஜனவரி 22, 2015, சூதாட்ட நடைமுறைகளை கண்டு கொள்ளாமல் இருந்ததாகவும், மேலும் முறைகேடுகளை மறைக்க முயன்றதாகவும், விசாரணைக்குழுவை திசை திருப்பியதாகவும் சீனிவாசன் மீது சுப்ரீம் கோர்ட் குற்றம் சாட்டியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து