முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் நிரந்தரமாக நிறுத்தம்: பிசிசிஐ அறிவிப்பு

புதன்கிழமை, 15 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

மும்பை: சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.  இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சிறப்பாக விளையாடும் டி20 அணிகளை வைத்து நடத்தப்படும் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் 2009-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

இந்திய, ஆஸ்திரேலிய மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து நடத்தும் இந்த போட்டியில் மொத்தம் 12 அணிகள் போட்டியிடும். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் உடனடியாக நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக சாம்பியன்ஸ் லீக் நிர்வாக கவுன்சில் முடிவெடுத்துள்ளது.

இந்த கவுன்சிலைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மூன்றும் இணைந்தே இந்த முடிவை ஒரு மனதாக எடுத்துள்ளது. தொடருக்கு மக்களிடையே வரவேற்பு இல்லாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் அனுர்ராக் தாக்கூர், இது கடினமான முடிவு. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் விளையாடப்படும் டி20 போட்டிகளுக்கு சாம்பியன்ஸ் லீக் அர்த்தம் கொடுத்தது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து