எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி - நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு இனி மாதம் தோறும் 2 சனிக்கிழமைகள் பொது விடுமுறை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விடுமுறை அறிவிப்பு வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.இது குறித்து மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிதி சேவைத்துறையின் இணைச் செயலாளர் முகமது முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிசர்வ் வங்கிப் பட்டியலில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும், மாதத்தின் 2 வது மற்றும், 4 வது சனிக்கிழமைகள் பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதற்கான அரசாணை ரிசர்வ் வங்கி ஒப்புதலுடன் வெளியிடப்பட்டது.அதே சமயம் மாதத்தின் முதல் மற்றும் 3 வது சனிக்கிழமைகளில் முழு வேலை நாளும் வங்கிகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்கி ஊழியர் சங்கங்களுக்கும் இந்திய வங்கிகள் சங்கத்துக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்பட்டிருந்தது.
வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலைநாட்களாக அறிவிக்குமாறு வங்கிகள் சங்கம் கேட்டுக் கொண்ட நிலையில் 2 மற்றும் 4 வது சனிக்கிழமை மட்டும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேசிய விடுமுறை நாட்களிலும் வங்கிகள் செயல்படாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


