எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, பக்ரீத் பண்டிகையையொட்டி கவர்னர் ரோசய்யா - தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கவர்னர் ரோசய்யா:– கவர்னர் ரோசய்யா வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:–பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் முஸ்லிம் சகோதரர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தியாக திருநாளான இந்த பண்டிகை சகோதரத்துவம், நல்லிணக்கத்தை மேம்படுத்தட்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி:– தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:– தியாகத்திருநாள் எனும் பக்ரீத் பெருநாள் இஸ்லாமிய சமுதாய மக்களால் மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்படுகிறது.‘இஸ்லாம்’ என்பது ஒரு சமயம் அல்லது மதம் என்று கூறுவதைவிட, அது ஒரு ‘வாழ்க்கை நெறி’ என்றே கூறலாம் என பேரறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் காலங்களில் மட்டுமல்லாமல் எக்காலத்திலும், எந்நாளிலும் இஸ்லாமிய மக்களின்பால் பரிவு கொண்டுள்ள இயக்கமாகும்.இஸ்லாமிய சமுதாய மக்களிடம் தொடர்ந்து அன்பு செலுத்தி வரும் உணர்வோடு; பக்ரீத் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய உடன் பிறப்புகளின் குடும்பத்தார் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் பெருகி இன்பம் நிலவிட எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:– தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:–தியாகத் திருநாள் என்று கூறப்படும் பக்ரீத் பண்டிகையை, இஸ்லாமிய சமுதாய மக்கள் குர்பானி வழங்கி கொண்டாடி வருகிறார்கள். ஏழை, பணக்காரன், இருப்பவர், இல்லாதவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்கின்ற எவ்வித பாகுபாடும் இல்லாமல் தியாகத்தையும், ஈகையையும் போற்றுகின்ற வகையில் இந்தநாள் கொண்டாடப்படுகிறது. அனைவரும் பகிர்ந்துண்டு வாழுகின்ற, சமதர்ம நெறியை போற்றும் வகையில் குர்பானி வழங்கி கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு எனது இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்களை தேமுதிக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:–
உடல், பொருள் அனைத்தையும் தியாகம் செய்யும் மனப்பக்குவத்தை அனைவரும் பெறவேண்டும் என்பதும் இந்த தியாகத் திருநாள் மூலம் உணர்த்தப்படுகிறது. அனைத்தையும் கடந்து நிற்கும் இறைவனை தியாகச் செயல்கள் மட்டுமே மகிழ்ச்சிப்படுத்தும்.இறைவனின் கட்டளையை இறைதூதர் இப்ராகிம் எப்படி பின்பற்றினாரோ அதேபோல் முகமது நபிகளின் போதனையை பின்பற்றி அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்க இந்த நன்னாளில் இசுலாமிய பெருமக்களோடு இணைந்து அனைவரும் சபதம் ஏற்போம்.
த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன்:– இந்த வருடம் அனைத்து நாடுகளிலும் ஒரே நாளில் முதல் பிறை தெரிந்ததால் வருகின்ற 24 ஆம் தேதி உலகம் முழுவதும் ஒரே நாளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.ஏழை, எளிய மக்களுக்கு உதவுகின்ற இந்த தியாகத் திருநாளில் நாம் “நமது இஸ்லாமிய சமுதாயத்தினர் மீது அன்பு பாராட்டுவோம்; அவர்களுக்கு அரணாக இருப்போம்; அவர்களையும் அரவணைத்து இந்தியாவை வளமும், வலுவும் உள்ள நாடாக உருவாக்குவோம்’’ என சபதம் ஏற்போம்.இந்தியாவில் உள்ள அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையுடனும், மத நல்லிணக்கத்துடனும் இணைந்து நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறேன்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:– ‘குர்பான்’ என்றால் அரபியில் ‘நெருக்கத்தை ஏற்படுத்துதல்’ ஆகும். ‘குர்பானி’ என்ற உருது சொல் ‘தியாகப் பிராணி’ என்று பொருள் தரும். ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக, இறைவனுக்காக தியாகத்தைச் செய்வதன் மூலம் அவனது நெருக்கத்தைப் பெற்றிட முடியும் என்று வலியுறுத்தும் இத்தியாகத் திருநாளில் தியாகத்தால் பிறந்து, தியாகத்தால் வளர்ந்து, தியாகத்தால் இயங்கி வரும் ம.தி.மு.க. சார்பில் எனது நெஞ்சார்ந்த தியாகப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:– உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று ‘‘தியாகத்திருநாள்’’ என்று போற்றப்படும் பக்ரீத் பண்டிகையாகும்.இந்த இனிய திருநாள் உலகெங்கும் எந்நாளும் சகோதரத்துவம் தழைத்தோங்கும் விதமாகவும், சமத்துவமும் சமாதானமும் நிலைத்திருக்கும் விதமாகவும், அனைத்து இதயங்களிலும் அன்பைப் பரிமாறும் நன்னாளாகப் பரிணமிக்கட்டும்.
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:– இப்ராஹிம் நபி இறைவன் ஒருவனே என்ற உயரிய தத்துவத்தை உலகிற்கு தம்முடைய மார்க்கத்தின் செய்தியாக அளித்தவர். அவரின் இறைபக்தி எல்லையிலாது, ஈடில்லாதது. தம்முடைய மகனான இஸ்மாயிலை அவனுடைய முழு சம்மதத்துடன் இறைவனுக்கு காணிக்கையாக்க முனைந்த தியாக செயலை நினைவு கூறும் தியாகத் திருநாளே ஹஜ் பெருநாள் என்னும் பக்ரீத் பெருநாளாகும்.இந்த புனித திருநாளாம் பக்ரீத் நந்நாளில், நாட்டு மக்கள் அனைவரும் மதவேற்றுமைகளை கடந்து, ஒற்றுமையுடன் செயல்பட்டு நம் நாட்டினை எதிர் நோக்கியுள்ள சவால்களை முறியடிக்க சூளுரை மேற்கொள்ள வேண்டும். மேலும் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ள தலைவர்கள் வருமாறு:– அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திருநாவுக்கரசர், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர் பாரிவேந்தர், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகி தலைவர் டாக்டர் சேதுராமன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் தெகலான் பாகவி, அகில இந்திய தேசிய லீக் மாநில தலைவர் இளையத்துல்லா.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்
12 Sep 2025புதுடெல்லி : துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.
-
ராமர் குறித்து பேசியதால் ஆட்சியை இழந்தேன்: நேபாள முன்னாள் பிரதமர்
12 Sep 2025காத்மாண்டு : ராமரின் பிறப்பிடம் குறித்து பேசியதால் ஆட்சியை இழந்தேன் என்று நேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.
-
திருச்சியில் இன்று முதல் பிரச்சாரத்தை துவங்குகிறார் த.வெ.க. தலைவர் விஜய் மக்களை சந்திக்கிறேன் என்று அறிக்கை
12 Sep 2025சென்னை, திருச்சியில் இன்று மக்களை சந்திக்கிறேன் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில்15 - வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு: ஜனாதிபதி முர்மு பதவிப் பிராமணம் செய்து வைத்தார்
12 Sep 2025புதுடெல்லி, துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையடுத்து நேற்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் நாட்
-
வாக்காளர் பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு
12 Sep 2025சென்னை, வாக்காளர் பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல்களை ஒப்பிடும் பணியை செப்.26க்கு
-
கவின் படுகொலை இந்தியாவுக்கு அவமானம்: பிருந்தா காரத் கருத்து
12 Sep 2025நெல்லை, கவின் ஆணவ படுகொலை இந்தியாவிற்கே அவமானம் என்று மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.
-
ஆசிய கோப்பை 4-வது லீக் போட்டி: ஹாங்காங்கை வீழ்த்திய வங்கதேசம்
12 Sep 2025துபாய் : வங்காளதேச அணி 17.4 ஓவர்களில் இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
8 அணிகள் பங்கேற்பு...
-
ராணுவத்தில் இந்தியர்களைசேர்க்க வேண்டாம்: ரஷ்யாவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்
12 Sep 2025புதுடெல்லி, ரஷிய ராணுவத்தில் இந்தியர்களை சேர்ப்பதை நிறுத்துங்கள் என்று வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: அண்ணாமலை அறிவிப்பு
12 Sep 2025சென்னை : கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
உழவர்கள் நலன் காக்க ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ துவக்கம்: அமைச்சர் தகவல்
12 Sep 2025சென்னை : தமிழ்நாட்டில் முந்திரி சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியினை மேலும் அதிகரித்து, முந்திரி சாகுபடி செய்யும் உழவர்கள், முந்திரித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின
-
தமிழகத்தின் உள்ள பல்வேறு கோவில் கும்பாபிஷேகம் விழா
12 Sep 2025வேதாரண்யம், தமிழகத்தின் உள்ள பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
-
தாமதத்தை முற்றிலும் தவிர்க்க பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பெறும் புதிய வசதி : விரைவில் அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டம்
12 Sep 2025சென்னை : தாமதத்தை முற்றிலும் தவிர்க்க பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் புதிய வசதியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க கூட்டுறவுத்துறைக்கு - நபார்டு வங்கி விடுவிப்பு
12 Sep 2025சென்னை : விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க கூட்டுறவுத்துறைக்கு ரூ.3,700 கோடியை நபார்டு வங்கி விடுவித்துள்ளது.
-
டெல்லி, மும்பை உயர்நீதிமன்றத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
12 Sep 2025புதுடெல்லி : டெல்லி, மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-09-2025.
12 Sep 2025 -
செல்போனில் பேசிக்கொண்டே பஸ்சை இயக்கிய டிரைவர்: பயணிகள் அச்சம்
12 Sep 2025நெல்லை : செல்போனில் பேசிக்கொண்டே அரசு பஸ்சை டிரைவர் இயக்கியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
-
அனல்மின் நிலைய கட்டுமான பணி மின்சார வாரிய தலைவர் ஆய்வு
12 Sep 2025சென்னை, எண்ணூரில் புதிதாக கட்டப்படும் அனல்மின் நிலையத்தை மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
-
நடிகை பாலியல் புகார்: சீமான் மன்னிப்பு கேட்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
12 Sep 2025டெல்லி, நடிகை பாலியல் புகார் தொடர்பாக சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
நேபாளத்தில் கலவரம்: ஹெலிகாப்டர் கயிறு மூலம் தப்பிய மந்திரியின் குடும்பம்
12 Sep 2025காத்மாண்டு : நேபாளத்தில் நடந்த கலவரத்தின்போது மந்திரியின் குடும்பம் ஹெலிகாப்டரில் கயிறு மூலம் தப்பியது.
-
மும்பை நகரை பம்பாய் என்று அழைப்பதா? - நவநிர்மாண் சேனா எச்சரிக்கை
12 Sep 2025மும்பை : மும்பை நகரை பாம்பே, பம்பாய் என்று அழைப்பதை நிறுத்துங்கள் என்று நவநிர்மாண் சேனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களில் நாளிதழ்களின் விற்பனை 2.77 சதவீதம் அதிகரிப்பு
12 Sep 2025சென்னை : நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நாளிதழ்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
-
சலுகைகள் ரத்து எதிரொலி: அரசினா் மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபட்ச
12 Sep 2025கொழும்பு : இலங்கையின் முன்னாள் அதிபா்கள் மற்றும் அவா்களது மனைவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, கொழும்பில் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்ச வ
-
மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை
12 Sep 2025சென்னை : மழையால் சேதம் அடைந்த நெல் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.
-
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி : வானிலை ஆய்வு மையம் தகவல்
12 Sep 2025சென்னை : வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடு அரசு சார்பில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா - நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்டோர் பங்கேற்பு
12 Sep 2025சென்னை : தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் திரையுலகில் பொன் விழா காணும் சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவ