முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பொறியியல் கவுன்சிலிங் தொடங்கியது

சனிக்கிழமை, 25 ஜூன் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வின் இரண்டாம் நாளான  நேற்று, மாற்றுத் திறனாளிகள் பிரிவில் கலந்தாய்வு தொடங்கியது.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேர, ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 722 மாணவ-மாணவியர் விண்ணப்பங்கள் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ரேண்டம் எண் மற்றும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் அபூர்வதர்ஷினி என்ற மாணவி முதலிடம் பிடித்தார். விக்னேஷ் 2-வது, பரதன் 3-வது இடத்தையும் பிடத்தனர். 7 மாணவ - மாணவியர் 200-க்கு 200 கட்ஆப் மதிப்பெண்களை பெற்றனர்.

இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 2-ம் நாளாக நேற்றும், சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. முதல் நாளான நேற்று முன்தினம் விளையாட்டு வீரர்களுக்கான பிரிவில் 500 இடங்களுக்கு, ஆயிரத்து 188 பேர் அழைக்கப்பட்டனர். முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு இடஒதுக்கீடு ஆணைகளை விளையாட்டுத்துறை செயலாளர் டாக்டர் ராஜேந்திரகுமார் வழங்கினார். 500 இடங்களில் 352 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள இடங்கள் பொதுக் கலந்தாய்வுக்கு மாற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியுள்ளது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடங்கி, அடுத்த மாதம் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. கலந்தாய்வுக்கு வரும் மாணவியர், உடன் வருபவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்திலேயே தங்கும் வசதியும் செய்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்