முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆதரவு இருந்தால் நம்பிக்கையுடன் ஆட முடியும் : ஷிகார் தவான் பேட்டி

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

நார்த் சவுன்ட்,(ஆன்டிகுவா   -  அணியின் கேப்டனின் ஆதரவும், பயிற்சியாளர் ஆதரவும் இருந்தால் அந்த அணியில் ஆடும் வீரர் நம்பிக்கையுடன் ஆடுவார் என்று இந்திய அணியின் அதிரடி வீரர் ஷிகார் தவான் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட்  அணி 4 டெஸ்ட் கொண்ட தொடரில் ஆட தற்போது மேற்கு இந்திய தீவில் பயணம் மேற் கொண்டுள்ளது. தற்போது இந்த அணிகள் இடையே முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்து வருகிறது. இந்த டெஸ்ட்டில் இந்திய வீரர் ஷிகார் தவான்  முதல் இன்னிங்சில் 84 ரன் அடித்தார்.

இந்த ரன் குவிப்பால் அவர் இந்திய அணியில் தொடர்ந்து ஆடுவார் என்ற நம்பிக்கை அந்த வீரருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பயிற்சி ஆட்டங்களில் அடுத்தடுத்த போட்டிகளில் கே.எல்.ராகுல் இரு அரை சதங்களை அடித்தார். இதனால் அந்த வீரர் ஷிகார் தவானுக்கு பதிலாக இடம் பெறுவார் என ஒரு யூகம் நிலவியது. இந்த நிலையில் ஷிகார் முதல் டெஸ்ட்டில் 84 ரன் குவித்து அணியில் தொடர்ந்து இடம் பெறுவதை உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எந்த வீரரும் நம்பிக்கையுடன் ஆடுவதற்கு அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் ஆதரவை பெற்றிருக்க வேண்டும்.

மேலும் சுய நம்பிக்கையும் வேண்டும்.துவக்க ஆட்டக்காரராக ஆடுவது என்பது கடுமையான பணியாகும். புதிய பந்தில் ஆடும் போதும் பந்து வீச்சாளர்கள் முழு சக்தியுடன் பந்து வீசும் போதும் துவக்க ஆட்டக்காரர்  நீங்கள் அதிக அளவு பந்துகளை அடிக்காமல் பொறுமை காக்க வேண்டும். நான் நிலைத்து ஆடி ரன்களை எடுக்க துவங்கிய நிலையில் சதம் அடிக்க முடியாமல் அவுட் ஆனேன். அது எனக்கு ஏமாற்றத்தை அளித்தது.வரவிருக்கும் ஆட்டங்களிலும் நான் நன்றாக ஆடுவேன். இந்த டெஸ்ட்டில் கேப்டன் விராட் கோலி மற்றும் புஜாராவுடன் ஜோடி சேர்ந்து ஆடியபோது அவர்களது ரன் குவிப்பு எனக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்