நாள் முழுவதும் சக்தி தரும் 5 எளிய உணவுகள்

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2016      வாழ்வியல் பூமி
oats(N)

நம் உடலில் சோர்வு ஏற்பட்டால் உடனே ஒரு கப் காஃபி அல்லது டீ அல்லது குளிர்பானம் அல்லது பிஸ்கட், கேக் என்று சாப்பிடுகிறோம். இந்த வகையான ஸ்நாக்ஸ் அந்த நேரத்துக்கு மட்டும் தான் நமது உடலுக்கு சக்தியை தருகின்றன. ஆனால், நாள் முழுவதும் ஆரோக்கியமும், அதேநேரம் உடனடி சக்தி தரும் 5 எளிய உணவுகள் உண்டு. அந்த உணவுகளை பற்றி இங்கே பார்ப்போம்.

1) ஓட்ஸ்:

தினமும் ஒருகப் ஓட்ஸ் சாப்பிடுங்கள். ஒரு கப் ஓட்ஸில் 150 கலோரி இருக்கிறது. இது  உடனே நமது உடலுக்கு சக்தியை கொடுக்கிறது. உடலுக்கு வலிமை தரும் ஓட்ஸில் பொட்டாசியமும், துத்தநாகமும் மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டிக் கொண்டே இருக்கும் ‘அவினின்’ என்ற இரசாயனப்பொருளும் இதில் உள்ளது. இதனால் உடலும், உள்ளமும் உடனடியாகச் சக்தி பெருகிறது. இந்த ஓட்ஸை காலை 11 மணிக்கும் மாலையில் 3 மணி அளவில் கஞ்சியாக செய்து சாப்பிடலாம்.

2) வைட்டமின் “சி” நிறைந்த உணவுகள்:

நம் உடலில் எல்லாத் திசுக்களிலும் வைட்டமின் “சி” உள்ளது. உடல் துன்பத்தையும் மனத்துன்பத்தையும் ஒருவர் தாங்கிக் கொண்டு உழைத்தால் அவர் உடலில், வைட்டமின் “சி” சரியான அளவில் இருக்கிறது என்று அர்த்தம். நம் உடலை எப்பொழுதும் உற்சாகமாக வைத்துக்கொள்கிறது. வைட்டமின் “சி”-யை ஆரஞ்சுசாறு, கொய்யா, நெல்லிக்காய் முதலியவற்றிலிருந்து நாம் எளிதாகப் பெறலாம். இவற்றில் வைட்டமின்  “சி” சத்து அதிகம் உள்ளது. இதுதவிர தினமும் ஒரு கப் கொண்டைக் கடலை அல்லது கடலை பருப்பு, சுண்டல் சாப்பிடலாம். காலையில் இட்லி, தோசைக்கு சட்னியாக பச்சமிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் சேர்த்த தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி செய்துசாப்பிடலாம். இதிலும் வைட்டமின் “சி” அதிகம் இருக்கிறது.

நீரழிவு நோயாளிகள் ஊற வைத்த கொண்ட கடலையினை வேக வைத்து தினமும் சாப்பிட்டால் எளிதாக உடலுக்கு சக்தி கிடைக் கும். முட்டை கோஸ் சூப், பாசிப் பருப்பு பாயாசம், முளைவிட்ட பச்சபயிறு சாலட் இதிலும் அதிகமாக வைட்டமின் “சி” உளளது.  தினமும் காலைசூப், ஆரஞ்சு ஜூஸ், சுண்டல் சாப்பிடுவதால் நமது உடலுக்கு உடனடியாக சக்தி கிடைக்கிறது.

3) தண்ணீர்:

தண்ணீரில் சத்துக்கள் மற்றும் கலோரிகள் என்று எதுவும் இல்லை. ஆனால் அரை டம்ளர் அளவு தண்ணீர் உடலில் குறைந்தால், மனதிலும், உடலிலும் சோர்வு ஏற்ப்படும். தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு என்று பழங்களாகவும் சாப்பிடலாம். அவற்றில் 70 சதவிகிதம் வரை தண்ணீர்தான் உள்ளது. தினமும் ஏதாவது ஒரு சமயம், பழங்களாக சாப்பிட்டால் நல்லது. தண்ணீர் குடிப்பதால், உடலில் வயிற்றில் இருந்து குடல், சிறுநீரகம் என்று எல்லா இடங்களையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கிவிடும்.

ஒருபக்கம் தண்ணீர் குடித்துவிட்டு, இன்னொரு பக்கம் காபி குடித்தால் பலனே இல்லை. குடித்த தண்ணீரை வற்றவைத்து விடும் தன்மை காபிக்கு உள்ளது. இதற்கு காபியில் உள்ள காபின்தான் காரணம். ஆல்கஹாலும் அப்படித்தான். தண்ணீர் வேண்டிய அளவு குடித்து விட்டு, மதுப்பழக்கம் இருந்தால், நாக்கு வறண்டு தான் போகும். உடலில் தண்ணீர் சத்து இருக்காது.

4) பார்லி தண்ணீர்:

பார்லி அரிசியில் மூளைக்கு புத்துணர்வு தரும் பாஸ்பரஸ் உப்பு அதிகமாக இருக்கிறது. நரம்புகளைப் பலப்படுத்தும் “பி” வைட்டமினும் உள்ளது. பார்லியைக் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த தண்ணீரை பாட்டிலில் வைத்து உடலில் சோர்வு ஏற்படும் பொழுது ஒரு டம்ளட் பார்லி தண்ணீர் குடித்தால் இரத்தத்தில் கலந்தவுடன் உடலின் குளூக்கோஸ் அளவு உயர்ந்து ஞாபகசக்தி அதிகரிக்கும். மிகவும் துடிப்புது உற்சாகத்துடன் வேலை செய்வதை நீங்களே உணர்வீர்கள்.

5) ராகி மாவு:

இதில் கால்சியம் அதிகம். இதனை தினமும் ஒரு வேலை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான சக்தியினை இது தருகிறது. கடினமான உழைப்பாளிகள் காலையிலும், மாலையிலும் 2 கப் கேழ்வரகுக்கஞ்சி அல்லது 2 கேழ்வரகு ரொட்டியோ சாப்பிடுவதால் குறைந்தது 5 மணி நேரம் சுறுசுறுப்பாக இருக்கலாம். உடலில் உள்ள நரம்பு மண்டலத்தை இதில் உள்ள கால்சியம் புதுப்பித்து விடுகிறது.

Trisha & Vishaal pair up for new film | Cine Gossips

Johnny Movie Review | Top Star Prashanth | Sanchita Shetty | Vetriselvan | Thiagarajan

Thuppakki Munai Review | Vikram Prabhu | Hansika | Movie Review | Thinaboomi

ஆன்மிகம் என்றால் என்ன | Aanmeegem | Brahma Kumaris Tamil | Arivom AanmeegamTamil

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்: