LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதிய காரை கூட எளிதாக தேர்வு செய்து வாங்கிவிடலாம். ஆனால், பயன்படுத்தப்பட்ட கார் வாங்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பலருக்கு பட்ஜெட் பிரச்சனை, அதன்பிறகு முதல் முறையாக பயன்படுத்திய கார் வாங்கி ஓட்டி பழகிய பின்னர் புதிய கார் வாங்கலாம் என்ற முடிவில் காரை வாங்கிவிடுவர். அதன்பின்னர், ஏற்படும் கசப்பான அனுபவங்களால் பயன்படுத்தப்பட்ட காரை ஏன் வாங்கினோம் என்று புலம்புவதை கண்கூடாக பார்த்திருக்கிறோம்.
ஆனால், தற்போது இளைய தலைமுறை வாடிக்கையாளர்கள் 3 முதல் 5 ஆண்டுகளில் பழைய காரை மாற்றி புதிய கார் வாங்குவதால், யூஸ்டு கார்கள் மார்க்கெட்டில் சிறந்த முறையில் கிடைக்கின்றன. எனவே பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவதற்கு முன் சில விஷயங்களை கவனத்தில் வைத்தால் இதுபோன்ற கசப்பான அனுபவங்களை தவிர்க்கலாம் என்ற நம்பிக்கையுடன் செய்தித் தொகுப்பை வழங்குகிறோம்.
பட்ஜெட் & கார் தேர்வு
பயன்படுத்தப்பட்ட காரை வாங்க முடிவு செய்தபின், பட்ஜெட்டிற்கும், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கும் தகுந்த மாடலை தேர்வு செய்வது மிக மிக முக்கியம். 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு ஹேட்ச்பேக் கார் போதுமானது. அதிக குடும்ப உறுப்பினர்கள் கொண்டவர்களுக்கு எஸ்.யூ.வி அல்லது எம்.பி.வி கார் மாடல்கள் பொருத்தமாக இருக்கும். அடிக்கடி நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தால் டிக்கி வசதி கொண்ட செடன் ரக கார்களை தேர்வு செய்யலாம்.
மார்க்கெட் நிலவரம்
நாம் வாங்குவதற்கு தேர்வு செய்துள்ள சில மாடல்களின் மார்க்கெட் விலை நிலவரத்தை தெரிந்து கொண்டு செல்வதும் அவசியம். காரை தேர்வு செய்யும்போது அதன் விலையை மார்க்கெட் நிலவரத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஆன்லைனில் இந்த விபரங்களை எளிதாக பெறும் வாய்ப்பு இருக்கிறது.
விற்பனையாளர் தேர்வு
பயன்படுத்தப்பட்ட காரை வாங்கும்போது மோசடிகள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, நல்ல அறிமுகமான விற்பனையாளர் அல்லது மார்க்கெட்டில் நீண்டகாலமாக நிலைத்து நிற்கும் நம்பகமான விற்பனையாளரை தேர்வு செய்வது உத்தமம். மாருதி, ஹூண்டாய் போன்ற முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களும் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனங்களை நடத்தி வருகின்றன. இந்த நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவது பாதுகாப்பானது. மேலும், பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு சில நிறுவனங்கள் வாரண்டியும் தருகின்றன.
பைனான்ஸ்
பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு பல முன்னணி பைனான்ஸ் நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு கடனுதவி அளிக்கின்றன. காருக்கு கடன் வாங்கும் முன் பைனான்ஸ் நிறுவனங்களின் வட்டிவிகிதங்கள், டாக்குமெண்ட் கட்டணங்கள் உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொண்டு, அதில் உங்களுக்கு பொருத்தமான கடன் திட்டத்தை தேர்வு செய்யுங்கள்.
டெஸ்ட் டிரைவ்
விற்பனையாளிரிடம் உள்ள கார்களில் உங்களுக்கு பொருத்தமான காரை தேர்வு செய்தவுடன், அதை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டும். உங்களுக்கு கார் ஓட்டிய அனுபவம் இல்லையென்றால் கூட வரும் நண்பர்கள் மற்றும் தெரிந்த மெக்கானிக்குகள் மூலமாக காரை டெஸ்ட் டிரைவ் செய்து காரின் கன்டிஷனை தெரிந்து கொள்ளலாம். தவிர, கார் எத்தனை கி.மீ., தூரம் ஓடியிருக்கிறது, பாகங்களின் தேய்மானம், விபத்துக்களில் சிக்கிய காரா என்பது உள்ளிட்ட விபரங்களை கண்டிப்பாக அறிந்த பின்னரே வாங்க வேண்டும். முடிந்தால் உங்கள் குடும்பத்தினரை அதில் உட்கார வைத்து வசதியாக இருக்கிறதா என்பதையும் பார்த்துவிடுங்கள்.
காரின் ஜாதகம்
காரை தேர்வு செய்தபின், அதன் பதிவு புத்தகம் (ஆர்.சி.புக்), சாலை வரி செலுத்தியதற்கான ரசீது, இன்ஷ்யூரன்ஸ், ஒரிஜினல் இன்வாய்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை கவனமாக சரிபார்ப்பது மிகவும் முக்கியமானது. கார் கடனில் வாங்கப்பட்டிருந்தால், கடன் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டு விட்டதா அல்லது தவணை பாக்கி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதன் விபரங்கள் ஒரிஜினல் ஆர்.சி.புத்தகத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஹைப்பாத்திகேஷன் நீக்கம்
ஒருவேளை கடன் கட்டி முடிக்கப்பட்டு, ஆர்.சி., புத்தகத்தில் ஹைப்பாத்திகேஷன் என்று குறிப்பிடப்பட்டிருந்தால், விற்பனையாளரிடம் என்.ஓ.சி., சான்றை வைத்து ஆர்.டி.ஒ., அலுவலகத்திலிருந்து ஹைப்பாத்திகேஷனை நீக்கி தர சொல்லுங்கள். ஆர்.சி., புத்தகத்தில் உள்ள சேஸிஸ் மற்றும் எஞ்சின் நம்பர்களும், காரில் உள்ள சேஸிஸ் மற்றும் எஞ்சின் நம்பர்களும் ஒன்றாக உள்ளதா என்று சோதித்து பார்க்க வேண்டும்.
காரின் வரலாறு
பயன்படுத்தப்பட்ட கார் சந்தையில், திருட்டு கார்களை விற்பனை செய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, காரின் சர்வீஸ் புத்தகம், டயர் தயாரிப்பு தேதிகள் உள்ளிட்டவற்றை வைத்து வரலாறை கண்டுபிடித்து விடலாம். காரை பற்றிய அனைத்து விபரங்களும் உங்களுக்கு தெரியவில்லையென்றால், நம்பிக்கையான, நன்கு அறிமுகமான மெக்கானிக்கை அழைத்து செல்லுங்கள். அவரை வைத்து மேற்கூறிய அனைத்து விபரங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
கார் டீல்
காரின் கண்டிஷன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் திருப்தி ஏற்பட்டு, காரை வாங்க முடிவு செய்தபின் விற்பனையாளிரிடம் கார் விலை பற்றி பேரம் பேசுங்கள். காரின் கண்டிஷன் நன்றாக இருந்தால், உங்கள் பட்ஜெட்டைவிட சில ஆயிரங்கள் கூடுதலாக இருந்தாலும் யோசிக்க வேண்டாம்.
பெயர் மாற்றம்
காரை வாங்கும்போதே அனைத்து ஒரிஜினல் ஆவணங்களையும் கையோடு வாங்கி விடுங்கள். மேலும், பழைய உரிமையாளரிடமிருந்து, உங்கள் பெயருக்கு பதிவை மாற்றும் பார்ம்-29, காரை விற்பனை செய்தது மற்றும் வாங்கியதற்கான அத்தாட்சியான பார்ம்-30 ஆகிய ஆவணங்களில் கையெழுத்திட்டு கையோடு வாங்கி கொள்ளுங்கள். ஓல்டு இஸ் கோல்டு...
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பொரி உப்புமா![]() 1 day 3 min ago |
கடாய் வெஜிடபிள்![]() 3 days 2 hours ago |
தக்காளி ரசம்![]() 1 week 6 hours ago |
-
கல்வி, மருத்துவ திட்டங்களை இலவசம் என சொல்ல முடியாது: அனைவருக்கும் எளிய முறையில் கல்வி கிடைக்க செய்வதே அரசின் நோக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
13 Aug 2022சென்னை : கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது என்பது இலவசம் ஆகாது என்றும் அனைவருக்கும் எளிய முறையில் கல்வி கிடைக்க செய்வதே இந்த அரசின் நோக்கம் என்றும் மு
-
நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்றி கோலாகலம்: தமிழகத்தில் ஏராளமானோர் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றினார்கள்
13 Aug 2022தேசிய கொடிகள் ஏற்றப்பட்டதால் பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் மூவர்ண மயமாக காணப்பட்டது.
-
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் முயற்சியை உடனே கைவிட வேண்டும் : ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Aug 2022சென்னை : கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல்வர் மு.க.
-
ஆப்கனில் தலிபான்களின் தடையை மீறி சகோதரியுடன் இணைந்து ரகசிய பள்ளி நடத்தும் பெண்
13 Aug 2022காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தடையை மீறி இளம்பெண் ஒருவர் தனது சகோதரியுடன் இணைந்து வீட்டிலேயே ரகசிய பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.
-
சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் கைது : கண் பார்வை இழக்க நேரிட்டதாக தகவல்
13 Aug 2022நியூயார்க் : சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னை உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி அரங்கு அமைப்பு
13 Aug 2022சென்னை உணவுத் திருவிழாவில் நேற்று முதல் பீப் பிரியாணி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
-
ஆப்கனில் தற்கொலைப்படை தாக்குதல்: தலிபான் மதகுரு பலி
13 Aug 2022காபூல் : ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான் மதகுரு ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி பலியானார்.
-
பிரியங்காவைத் தொடர்ந்து சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி
13 Aug 2022காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
-
போதை பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு எடப்பாடி வேண்டுகோள்
13 Aug 2022சென்னை : கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது போர்க்கால அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விட
-
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது
13 Aug 2022நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
அளவுக்கு அதிகமாக உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் : டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு
13 Aug 2022சென்னை : தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்
-
நாடு முழுவதும் நாளை 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு: தமிழகத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான போலீசார் குவிப்பு
13 Aug 202275-வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
கொளத்தூர் தொகுதியில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
13 Aug 2022சென்னை : கொளத்தூர் தொகுதியில் புதிய திட்டப்பணிகளுக்கு நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.
-
முதலமைச்சரின் காலை உணவு திட்டம்: ஒருங்கிணைப்பு அலுவலராக ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்
13 Aug 2022சென்னை : முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு
13 Aug 2022டெல்லியில் குரங்கு அம்மை நோய் பாதித்த நபர்களின் எண்ணிக்கை 5- ஆக உயர்ந்துள்ளது.
-
75-வது சுதந்திர தின விழா: சென்னையில் இறுதி நாள் ஒத்திகை அணிவகுப்பு நிகழ்ச்சி
13 Aug 2022சென்னை : 75-வது சுதந்திர தின விழா சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று அணிவகுப்பு ஒத்திகை இறுதிநாள் நிகழ்ச்சி நடந்தது.
-
கனடாவில் 1,059 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு
13 Aug 2022ஒட்டாவா : கனடாவில் 1,059 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக பொது சுகாதார கழகம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-13-08-2022
13 Aug 2022 -
சோனியாவுக்கு மீண்டும் கொரோனா: விரைவில் நலம் பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
13 Aug 2022சென்னை : காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் சகோதரி மற்றும் கட்சி பொது செயலாளரான பிரியங்காகாந்திக்கு கடந்த 10-ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.
-
வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி தியாகிகளுக்கு நன்றி செலுத்துவோம் : ரஜினிகாந்த் வேண்டுகோள்
13 Aug 2022சென்னை : நாடு இல்லாவிட்டால் நாம் இல்லை.
-
பார்வையில்லாதவர்கள் இனி பார்வை பெறமுடியும்: பன்றியின் தோலில் இருந்து கருவிழியை உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனை !
13 Aug 2022பன்றியின் தோலில் இருந்து உருவாக்கப்பட்ட கருவிழியை மனிதர்களுக்கு பொருத்தி ஆராய்ச்சியாளர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
-
சென்னையில் தினகரன் தலைமையில் நாளை அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டம்
13 Aug 2022சென்னை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை (15-ம் தேதி) நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்கு அ.ம.மு.க.
-
ஓட்டல் அறையை விட்டு வெளியே வரவே கூடாது : கோத்தபயவுக்கு தாய்லாந்து அரசு தடை
13 Aug 2022பாங்காங் : பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், தாய்லாந்தில் தங்கி இருக்கும் வரையில் ஓட்டலை விட்டு வெளியே வர வேண்டாம் என்று போலீசார் அவருக்கு தடை விதித்துள்ளனர்.
-
விண்வெளியில் இருந்து சுதந்திர தின வாழ்த்து: வீடியோ மூலம் பகிர்ந்த இத்தாலிய வீராங்கணை
13 Aug 2022நியூயார்க் : இந்தியா, 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த வேளையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இந்தியாவுக்கு வாழ்த்துச் செய்தி வந்துள்ளது.
-
தேசப்பற்றை பிரதிபலிக்கும் வகையில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நாடு முழுவதும் தேசிய கொடி ஏற்றி மக்கள் கோலாகலம்
13 Aug 2022சென்னை : இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.