அரியலூர் மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சி துறை சார்பில் மாணவ,மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை போட்டிகள்

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      அரியலூர்

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில் கல்லூரி மாணவர்களிடையே தமிழ் மொழியில் எழுத்தாற்றல், படைப்பாற்றல், பேச்சாற்றல் ஆகியவற்றை வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 23.12.2016 அன்று நடைபெறுகிறது. ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு மாணவர் வீதம் மூன்று போட்டிகளுக்கும் மூன்று மாணவர்களை மட்டும் கல்லூரி முதல்வர் பரிந்துரை செய்து அனுப்பி வைக்கவேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ள பரிந்துரை கடிதம் பெற்றுள்ள மாணவர்கள் போட்டி நாளன்று காலை 9.00 மணிக்குத் தங்கள் வருகையைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். கவிதைப் போட்டி காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரையிலும், கட்டுரைப் போட்டி காலை 12.00 மணி முதல் 01.30 மணி வரையிலும், பேச்சுப் போட்டி பிற்பகல் 2.30 முதல் போட்டி முடியும் வரையிலும் நடைபெறும். கல்லூரி மாணவர்களின் ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10000-, இரண்டாம் பரிசு ரூ.7000-, மூன்றாம் பரிசு ரூ.5000- வழங்கப்படும்.முதல் பரிசுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள் மாநில அளவில் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு முதல் பரிசு ரூ.15,000 இரண்டாம் பரிசு ரூ.12,000 மூன்றாம் பரிசு 10,000 வழங்கப்படும். மேலும் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்குப் பயணப்படி வழங்கப்படும். மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளுக்குத் தமிழ் வளர்ச்சித் உதவி இயக்குநர் முனைவர் துரை.தம்புசாமி ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார் என்று மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: