முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார் எஞ்சினை பராமரிப்பதற்கான எளிய வழிகாட்டு முறைகள்...

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      மோட்டார் பூமி
Image Unavailable

காரின் இதயம் அதன் எஞ்சின்தான். இதயத்தை எவ்வளவு பயபத்திரமாக பார்த்துக்கொள்ள நினைக்கிறோமோ அந்தளவுக்கு கார் எஞ்சினையும் பராமரிக்க வேண்டும். இதனால், எஞ்சின் ஆயுட்காலம் கூடுவதோடு, அதிக மைலேஜ் மற்றும் இதர பிரச்னைகளிலிருந்தும் விடுபட முடியும்.

கார் எஞ்சின் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். சிறு பிரச்னை என்றால் கூட அலட்சியம் காட்டக்கூடாது. தற்போது வரும் கார்களின் எஞ்சின் எலக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே, அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டர்களில் மட்டுமே கார் எஞ்சினை சர்வீஸ் செய்ய வேண்டும்.

பணத்தை மிச்சப்படுத்துகிறோம் என்று நினைத்துக்கொண்டு அங்கீகாரம் பெறாத சர்வீஸ் சென்டர்களுக்கு செல்வதை தவிர்க்கவும். மாதத்திற்கு இரு முறையாவது கார் எஞ்சினை துடைத்து சுத்தப்படுத்திவிடுவது நல்லது. ஆயில் மற்றும் கூலன்ட்டை மாற்றும்போது கார் தயாரிப்பாளர் பரிந்துரையின்படி மாற்றுவது நல்லது.

காரை ஸ்டார்ட் செய்தவுடன் உடனடியாக விருட்டென கிளப்புவதை தவிர்க்கவும். கார் ஸ்டார்ட் ஆனவுடன் 60 வினாடிகள் வரை ஐட்லிங்கில் விட்டு அதன் பிறகு காரை மூவ் செய்வது நல்லது. எஞ்சினுக்கு எரிபொருள் எளிதாக சென்றபின் எஞ்சின் சுழலுவதால், எந்த தங்கு தடையும் இருக்காது. இதேபோன்று, எஞ்சினை ஆப் செய்யும்போதும் 30 வினாடிகள் ஐட்லிங்கில் விட்டு ஆப் செய்வது நல்லது.

காரை சமதளத்தில் நிறுத்தி பின்னர் டிப் ஸ்டிக்கை பயன்படுத்தி ஆயில் அளவை சரிபார்க்கவும். இதனால், எஞ்சினில் ஆயிலின் அளவை துல்லியமாக கணக்கிடமுடியும். மேலும், ஆயில் மாற்றும்போது ஆயில் ஃபில்டரையும் மாற்றுவது நல்லது.

இதே போன்று, காரின் பிக்கப் குறைந்தால் உடனடியாக ஏர் ஃபில்டரை மாற்றிவிடவேண்டும். சரியான அளவு கூலன்ட் இல்லையென்றாலும், முன்பக்க கிரில் வழியாக ரேடியேட்டருக்கு காற்றோட்டம் கிடைக்கவில்லையென்றாலும் எஞ்சின் அதிக சூடாகும். எஞ்சின் ஆயுட்காலம் குறைவதற்கு எஞ்சின் அதிக சூடாவதும் முக்கிய காரணம்.

எனவே, அவ்வப்போது கூலன்ட் அளவையும், பேனட்டை திறந்து ரேடியேட்டருக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கிறதா என்பதை அவ்வப்போது சோதனை செய்யுங்கள். மேற்கண்ட எளிய பராமரிப்பு முறைகளை கவனத்தில்க்கொண்டாலே காரின் எஞ்சின் தீர்க்க ஆயுளை பெறும் என்பதோடு, அதிக மைலேஜ் கொடுப்பதற்கும் உத்தரவாதம் தரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago