முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வனத் துறையினர் ஏற்பாடு

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      ஈரோடு

சத்தியமங்கலத்தை அடுத்த ராஜன்நகர் ஊராட்சி, கஸ்தூரி நகர் கிராமத்தில் ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைக்கும் நடவடிக்கையில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ராஜன்நகர் ஊராட்சி, கஸ்தூரி நகர் பகுதியில் வனத்தையொட்டி விவசாய நிலங்கள் உள்ளன. இரு தினங்களுக்கு முன்பு சிங்காரி என்பவரின் மகன் ஸ்ரீதர் என்பவர் வனப் பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

அப்போது, மேய்ச்சலில் இருந்த ஓர் ஆடு காணமால் போனது. அதேபோல, அடுத்துள்ள நந்தா பண்ணைத் தோட்டத்தில் கட்டியிருந்த ஆடும் காணமால் போனது தெரியவந்தது. இதுகுறித்து, வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத் துறையினர் ஆடுகளின் வழித்தடம், எச்சம், அதன் இயல்புகள் குறித்த ஆய்வு செய்தபோது இரு ஆடுகளையும் சிறுத்தை வேட்டையாடியது தெரியவந்தது.

10 இடங்களில் தானியங்கி

சிறுத்தையின் வழித்தடம், வனக் குட்டை உள்ளிட்ட 10 இடங்களில் தானியங்கி கேமரா வைக்கப்பட்டு அதன் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மூன்றாவது நாளாக புதர்மண்டிக் கிடக்கும் இப்பகுதியில் வேறு விலங்குகள் பதுங்கியிருக்கிறதா என 50-க்கும் மேற்பட்ட வனத் துறையினர் துப்பாக்கியுடன் கண்காணித்து வருகின்றனர்.

  சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் கிருஷ்ணன் சம்பவயிடத்தைப் பார்வையிட்டு  சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். வனத் துறையினர் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருப்பதாகத் தெரிவித்தார்.

சிறுத்தையின் நடமாட்டத்தை உறுதி செய்தபின் கூண்டு வைப்பது குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினர் தெரிவித்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago