திருப்பூர் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம்

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      கோவை

                 திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி .  தலைமையில் நேற்று (23.12.2016)  நடைபெற்றது.

ஒத்துழைப்பு

 

                இக்கூட்டத்தில், திருப்பூர் மாவட்டம் திறந்த வெளி கழிப்பிடமற்ற மாவட்டமாக உள்ளது. அந்த நிலை தொடர்ந்து கடைபிடிக்கப்படவேண்டும். மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கழிப்பிடம் என்ற நிலை உருவாக்கப்படவேண்டும். அதற்காக மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பும் செய்யும் எனவும் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நிலை திருப்பூர் மாவட்டத்தில் இல்லை எனவும் மாவட்ட கலெக்டர்  தெரிவித்தார்.

 

                 இதனைத்தொடர்ந்து, மாவட்ட கொத்தடிமைகள் கண்காணிப்புக்கூட்டம்  மாவட்ட கலெக்டர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கொத்தடிமைகள் பணிபுரிவதாக புகார்கள் ஏதும் மாவட்ட நிர்வாகத்திற்கு வரவில்லை இருப்பினும் தேவை ஏற்படின் வருவாய் கோட்டாட்சியர்கள் காவல்துணை கண்காணிப்பாளர்களுடன் இணைந்து திருப்பூர் மாவட்டத்திலுள்ள நூற்பாலைகள் மற்றும் தொழில்நிறுவனங்களில்  திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர்  அறிவுறுத்தினார்.

 

                முன்னதாக, திருப்பூர் மாவட்டத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விழிப்புணர்வு  கண்காணிப்புக்குழு மூன்றாம் காலண்டிற்கான கூட்டம் மாவட்ட கலெக்டர்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 9 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு இக்குழுவில் வழக்குகளின் நிலையினை விவாதம் செய்யப்பட்டு 9 வழக்குகளும் உண்மைக்கு புறம்பாக வழக்குகள் என குழுக்கூட்டத்தில் வைத்து முடிவு செய்யப்பட்டது.

 

               இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, தாராபுரம் சட்ட மன்ற உறுப்பினர் செ.காளிமுத்து, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் காமாட்சிதாசன், உடுமலைப்பேட்டை வருவாய்க்கோட்டாட்சியர் சாதனைக்குறள், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணைக்கண்காணிப்பாளர் கலிவரதன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பூங்கோதை, காவல் துணை கண்காணிப்பாளர்கள், மாவட்ட கண்காணிப்பு  மற்றும் விழிப்பு குழு உறுப்பினர்கள்  உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: