பூச்சி மருந்து கடைகளில் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      விழுப்புரம்
kalla

கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள பூச்சி மருந்து கடைகளில் பறக்கும் படையினர் திடீர் ஆய்வு மேற்கொணடனர். மாவட்ட ஆட்ச்சியர் உத்தரவின் பேரில் வேளாண்மை துணை இயக்குநர் கோவிந்தன் தலைமையில் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள பூச்சி மருந்து கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது பூச்சி மருந்து கடைகளில் காலாவதியான மருந்துகளை விற்பனை செய்கின்றனரா, தரமான பூச்சி மருந்துகளை கொடுக்கின்றனரா, இருப்பு விபரங்கள் சரியாக உள்ளதா, விவசாயிகளுக்கு ரசீதுடன் கொடுக்கின்றனரா என ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது வேளான்மை உதவி இயக்குநர் கோவிந்தன், வேளாணை அலுவலர்கள் அன்பழகன், இரா.செந்தில், கங்காகெளரி உள்ளிட்ட அலுவலர்கள் கள்ளக்குறிச்சி நகரில் உள்ள 20 கடைகளில் 7 கடைகளை ஆய்வு செய்தனர்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: