முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரியில் கடும் உறைபனிப்பொழிவு

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      நீலகிரி

நீலகிரியில் ஏற்பட்டுள்ள கடும் உறைபனிப்பொழிவினால் தேயிலை செடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் 15_ந் தேதி முதல் பனிக்காலமாகும். ஆனால் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக பனியின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. ஆனால் தற்போது மழை ஓய்ந்து பகலில் நல்ல வெயிலும், இரவில் கடுமையான பனிப்பொழிவும் நிலவுகிறது.

பனிப்பொழிவின் காரணமாக ஊட்டி, குன்னூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் வெகு சீக்கிரமே வீடுகளுக்குச் சென்று முடங்க வேண்டியும், காலையில் வெயில் வந்தபிறகு வெளியே வரும் சூழலும் நிலவுகிறது.

கடுமையான உறைபனிப்பொழிவின் காரணமாக புல்வெளிகள் வெள்ளை போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.

உறைபனியின் காரணமாக தேயிலை செடிகள் கருகும் சூழல் நிலவுகிறது. இதனால் தேயிலை விவசாயம் பாதிக்கப்படும். இதனையடுத்து தேயிலை விவசாயிகள் பனியன் தாக்கத்தை குறைக்க தேயிலை செடிகள் மீது பல்வேறு வகையான செடிவகைகளை கொண்டு மூடி பாதுகாத்து வருகின்றனர். அத்துடன் மழைகாய்கறிகளான முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு போன்ற பயிர்களும் பனியின் தாக்கத்தினால் பாதிக்கப்படும் நிலைமையும் உள்ளது. பனியின் தாக்கத்திலிருந்து தேயிலை செடிகளை காப்பாற்ற எஸ்டேட் நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago