இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு சங்க செயற்குழுக் கூட்டம்

kanchi 1

காஞ்சிபுரம் மாவட்ட இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு சங்க செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத் தலைவர் சோழனூர் மா.ஏழுமலை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மோகன், மாயகிருஷ்ணன், தவனகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயி துரைபாபு அனைவரையும் வரவேற்றார்.

 

கூட்டத்தில் வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு விவசாய பொருட்களுக்கும் உரிய நிவாரணமும் வழங்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து 1 ஏக்கருக்கு ரூ.20,000/- நஷ்ட ஈடாக வழங்கி விவசாயகளை பாதுக்க வேண்டும், தென்மாவட்டங்களின் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் இயற்கை உணவு திருவிழாவினை காஞ்சிபுரம் மாவட்டத்திலும் நடத்த வேண்டும்.

 

செய்யாறு மற்றும் பாலாற்றிலும் 10.கி.மீ தொலைவிற்கு ஒரு தடுப்பணை அமைத்திட வேண்டும், மதுராந்தகம் வட்டம் வல்லிபுரம், ஈசூர்புதூர் இடையே நீர் தேக்க அணை கட்டித்தரக் கோரியும் வரும் ஜனவரி 06 ஆம் தேதியன்று மதுராந்தகம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், அரசு துறைகளான வேளாண்மைத்துறை, தோட்டகலைத்துறை, பொறியியல்துறை ஆகிய துறைகள் அரசின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் எந்த விதமான சலுகைகளையும் விவசாயிகளுக்கு முறையாக தரப்படவில்லை. இதை அதிகாரிகளே அவர்களுக்கு தேவையான நபர்களுக்கு கொடுத்துவிடுகின்றனர்.

 

இதை வெளிப்படை தன்மையாக வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிப்ரவரி மாதத்தில் காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் முன் ஆர்பாட்டம் நடத்தப்படும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிரைவேற்றப்பபட்டன. நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely, நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021
இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021 ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை...
Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன் மாட்டுப் பண்ணையை லாபகரமாக நடத்த என்ன செய்ய வேண்டும் |Cow Farming Business Ideas in Tamil | இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 22.10.2021
பிக் பாஸ் வீட்டில் கும்மாங்குத்து தொடங்கியது... அபிநய்யை பிறாண்டிய பாவனி... பூனை பால் பாட்டிலை பிடித்து கொண்டு பால் பருகும் க்யூட்டான வீடியோ...! வெஜிடேரியன் உணவு சாப்பிடும் முதலை...!