ஊட்டியில் முதியோர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் பொ.சங்கர் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      நீலகிரி
28ooty-1

 

ஊட்டியில் முதியோர் ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான நடத்தப்பட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.

 

சங்கர் தொடங்கி வைத்தார்.

 

நீலகிரி மாவட்ட வருவாய்த்துறை சார்பில் ஓய்வூதியம் பெறும் முதியோர்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஊட்டியில் நேற்று நடைபெற்றது. சாந்திவிஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமினை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தொடங்கி வைத்து கூறியதாவது-

 

சிறப்பு மருத்துவ முகாம்

 

நீலகிரி மாவட்டத்தில் முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் பயன்பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் சிறப்பு இலவச மருத்துவமுகாம் நடத்த திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய தாலுகாக்களில் இன்று(நேற்று) முகாம் நடத்தப்படுகிறது. மீதமுள்ள குந்தா, கோத்தகிரி, பந்தலூர் வட்டங்களில் அடுத்த கட்டமாக இலவச மருத்துவமுகாம் நடத்தப்படும்.

 

இம்முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, எலும்பு முறிவு மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன என்றார்.

1324 முதியோர்கள்

ஊட்டியில் நேற்று நடைபெற்ற முகாமில் 1324 முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் 45 நபர்களுக்கு கண்புறை இருப்பது உறுதி செய்யப்பட்டு அதிலிருந்து 5 நபர்களுக்கு கண்புறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 நபர்களுக்கு அதற்கான மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர்.

 

இச்சிறப்பு முகாமில் ஊட்டி கோட்டாட்சியர் கார்த்திகேயன், வட்டாட்சியர் மகேந்திரன், சிறப்பு வட்டாட்சியர் தினேஷ் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள், ஊழியர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: