பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபாடி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      திருநெல்வேலி
31 12 jpg 02

திருநெல்வேலி.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்திய தமிழ்நாடு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபாடி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில்  கலெக்டர்  மு.கருணாகரன்  கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகளுக்கான காசோலைகளை  வழங்கினார். இவ்விழாவில்  கலெக்டர்  பேசியதாவது:-

இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுகளில் கபாடியும் ஒன்றாகும். மாணவ, மாணவியர்கள் கல்வியுடன் சேர்ந்து விளையாட்டிலும் ஈடுபாட்டை காட்டிட வேண்டும். பாரம்பரிய கபாடி விளையாட்டை ஊக்கப்படுத்தி பாதுகாத்திட தமிழக அரசு இது போன்ற விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது. போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கும், இப்போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என பேசினார்.

தொடர்ந்து கல்லூரி மாணவியர் அணியில் முதல் பரிசு கொடைக்கானல் அன்னை மதர் தெரசா மகளிர் பல்கலைக்கழகத்திற்கு, கேடயம் மற்றும் ரூ.1.20 லட்சத்திற்கான காசோலையும், இரண்டாம் பரிசு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு கேடயம் மற்றும் ரூ.90 ஆயிரத்திற்கான காசோலையும், மூன்றாம் பரிசு சென்னை மெட்ராஸ் பல்கலைக்கழகத்திற்கு கேடயம் மற்றும் ரூ.60 ஆயிரத்திற்கான காசோலையும்,கல்லூரி மாணவர் அணிகளில் முதல் பரிசு சென்னை ளுசுஆ பல்கலைக்கழகத்திற்கு கேடயம் மற்றும் ரூ.1.20 லட்சத்திற்கான காசோலையும், இரண்டாம் பரிசு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு கேடயம் மற்றும் ரூ.90 ஆயிரத்திற்கான காசோலையும், மூன்றாம் பரிசு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு கேடயம் மற்றும் ரூ.60 ஆயிரத்திற்கான காசோலையும் கலெக்டர்  மு.கருணாகரன்  வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர்  ஜான் டி.பிரிட்டோ, மாவட்ட விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதி சற்குணம்,  போட்டிகள் ஒருங்கிணைப்பாளர்  எஸ்.சேது,  மற்றும் விளையாட்டு வீரர், வீரங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: