முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுசூரி பொறியியல் கல்லூரி சார்பில் கோபியில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மராத்தான் போட்டி.2000 பேர் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜனவரி 2017      ஈரோடு
Image Unavailable

கோபிசெட்டிபாளையத்தில் உடல் ஆரோக்கியத்திற்காகவும் மாணவ மாணவிகளுக்கு பயனுள்ள வகையிலும் பொதுமக்களுக்கு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாரத்தான் போட்டி.சுமார் 2000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ப்பு.

2016 ஆம் ஆண்டு முடிவுற்று 2017ஆம் ஆண்டு பிறந்துள்ள இந்நாளில் உலக மக்கள் அனைவரும் பல்வேறு விதங்களில் புத்தாண்டு தினத்தை கொண்டாடி வருகின்றனர். இதில் ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் உடல் ஆரோக்கியத்திற்காகவும் மாணவ மாணவிகளுக்கு பயனுள்ள வகையிலும் பொதுமக்களுக்கு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆங்கில புத்தாண்டை புதிய வடிவில் கொண்டாடத்திட்டமிட்ட வியஜமங்கலத்தில் செயல்படும் சசூரி பொறியியல் கல்லூரியும் இணைந்து கோபி வெல்பேர் அசோசியன் என்ற சமூகஅமைப்பும் மாரத்தான் போட்டியை நடத்தினர். இதில் கல்லூரி பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட இரண்டாயிரத்திற்க்கும்  மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். 18 வயதிற்கு மேற்பட்ட பிரிவினருக்கான போட்டியை கோபி காவல்துறை கண்காணிப்பாளர் செல்வம் துவக்கி வைத்தார்,18 வயதிறிக்கு உட்பட்டோர் பிரிவினருக்கான போட்டியை மருத்துவர் குமரேசன் துவக்கி வைத்தார்,இப்போட்டி கோபி கலைக்கல்லூரி பிரிவிலிருந்து ஈரோடு – மைசூரு சாலையில் கரட்டூர் அலங்காரவளைவு வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு தனியார் பள்ளியில் நடைபெற்ற விழாவில் இரண்டு விதங்களில் ரொக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. 18 வயதுக்குட்பட்வர்களில் வெற்றி பெற்றவர்களுக்கும் 18 வயது மேற்பட்டவர்களுக்கும் முதல் பத்து இடங்களை பிடித்தவர்களுக்கு தலா முதல்பரிசு ரூ.8000, இரண்டாம் பரிசு ரூ.5000, மூன்றாம் பரிசு ரூ.3000, நான்காம் பரிசு ரூ.2000 ஐந்தாம் பரிசு ரூ.1000 என பத்து நபர்களுக்கு ரொக்கம் மற்றும்  பரிசுகள் வழங்கப்பட்டன,இதில் கோவை மாவட்டத்ததை சேர்ந்த நாகேஷ் பி 18 வயதிற்க்கும் மேற்பட்டோர் பிரிவில் முதலிடமும்,நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுபாஸ் 18 வயத்திற்க்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடமும்,மகளீர் பிரிவில் ஈரோடு மாட்டத்தை சேர்ந்த வசந்தாமணி 18 வயத்திறக்கு மேற்பட்டவர் பிரிவில் முதலிடமும்,ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மோகனபிரியா 18 வயதிற்க்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடமும் பெற்ற மாணவ மாணவிகளுக்கு  மருத்துவர் குமரேசன்,சசூரி கல்லூரி தாளாளர் கந்தசுவாமி,தலைமை செயல் அலுவலர் சசூரி கல்லூரி கவிதாமோகன்ராஜ் ,சுவாதி ஹரிகரன் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்,மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள்,மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்