எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) கோபா பிரிவு பயிற்றுநர் பணியிடத்துக்கு தகுதியுடைய நபர்கள் ஜனவரி 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஈரோடு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்று வரும் பொது மற்றும் தனியார் கூட்டமைப்புத் திட்டத்தில் காலியாக உள்ள கோபா பிரிவில் கணினி ஆபரேட்டர், புரோகிராமிங் அசிஸ்டென்ட் என்னும் பயிற்றுநர் பணியிடம் காலியாக உள்ளது.
இப்பணியிடம் இன சுழற்சி அடிப்படையில் எம்.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள், கலப்புத் திருமணம் செய்தோர், ஆதரவற்ற விதவைகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், அரசுக்கு நிலம் கொடுத்தவர்கள், ஆதரவற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
.தொகுப்பூதியமாகரூ. 14,000
தேர்வு செய்யப்படுவோருக்கு மாதந்தோறும் தொகுப்பூதியமாக ரூ. 14,000 வழங்கப்படும். கணினி அறிவியலில் இளநிலைப் பொறியியல் பட்டம், பட்டயச் சான்றிதழ், எம்.சி.ஏ பி.சி.ஏ தேசிய கைவினைப் பயிற்றுநர் (கோபா பிரிவில்) உள்ளிட்டோர் விண்ணப்பிக்கலாம்.
தகுதியுடைய நபர்கள் தங்களது பெயர், கல்வித் தகுதி, ஜாதிச் சான்றிதழ், முன் அனுபவச் சான்று, வீட்டு முகவரி, செல்லிடபேசி எண் ஆகியவற்றுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஜனவரி 10-ஆம் தேதிக்குள் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், சென்னிமலை சாலை, ஈரோடு-638009 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |