உடல் உறுப்புக்களைப்பாதிக்கும் உணர்ச்சிகள்! ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட்!!

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      வாழ்வியல் பூமி
valviyal-2

அதிக நேரம் பெற்றோரு டன் இல்லாத மழலைகள், பெற்றோரின் அன்பான அரவணைப்பை போதுமா ன முறையில் பெறாத குழ ந்தைகள் ஆகியோருக்கு மூளையின் பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து வெளிவரும் ஹார்மோன்களில் குறைபாடு ஏற்படுகிறது.

இதனால அவர்களின் வளர்ச்சி, ஆரோக்கியம், மனநிலை ஆகியவை பாதிக்கப்படுகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. உணர்ச்சிகள் உங்கள் உள் உறுப்புகளை பாதிக்கின்ற * சதாசர்வகாலமும் யோசனை , யோசனை என ஆழ்ந்த சிந்தனையில் மூழ்குபவர்களுக்கு மண்ணீரல் பாதிக்கப்படுகின்றது. இதன் காரணமாக அதிக சோர்வும், கவனக் குறைவும் இவர்களுக்கு ஏற்படுகின்றது.

* அதிக படபடப்பு படுபவர்கள க் கு மூச்சுத் திணறல் பெருங்குடல் வீக்கம் போன்றவை ஏற்படுகின்றன.

* மகிழ்ச்சியில் கூட தலைகால் புரியாமல் குதிப்பவர்களுக்கு தூக்கமின்மை, பரபரப்பு, நெஞ்சு படபடப்பு ஏற்படும்.

* எதற்கெடுத்தாலும் பயம், பயம் என அஞ்சி நடுங்குபவருக்கு சிறு நீர் அடிக்கடி வெளியேறும். கட்டுப்பாடில் லாமல் வெளியேறும்.

* கோபத்தின் விளைவாக கல்லீரல், பித்தப்பை பாதிக்கப்படும். ரத்தக் கொதிப்பு, மயக்கம், வெடிக்கும் தலைவலி ஏற்படும்.

* அதிக துக்கம் உடலை சக்தி இழக்கச் செய்யும். நுரையீரல் பாதிப்பு ஏற்படும்.

* உழைப்பில்லாமல் சதா உட்கார்ந்தே காலம் தள்ளினால் தசை தேய்வு நிகழும்.

* நீங்கள் 30 வயது மேற்பட்டவராக இருந்து தொடர்ந்து ஒரு மணி நேரம் நீங்கள் டி.வி. முன் அமர்ந் திருந்தால் உங்கள் வாழ்வில் 20 நிமிடங்களாவது குறைகின்றது என்பதனை உணருங்கள்.

* நாள் ஒன்றுக்கு சுமார் 15 மணி நேரத்தில் 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை அதிக உடல் உழைப்பின்றியே செல்கின்றது. இதுவே அதிக நோய்களுக்கு காரணம் ஆகின் றது.

* காலையில் 6 மணிக்காவது எழும் முறையினை பழக்கப்படுத் துங்கள்.

* மன பலம் இல்லாதவரே மன்னிக்கத் தெரியாதவர். எனவே நீ ங்கள் பலம் மிகுந்தவராக ஆக மறக்கவும், மன்னிக்கவும் செய்யுங்கள். உடல் நலமும், உள்ள நலமும் சிறப்பாக இருக்கும்.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்: