குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட 200 பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றனர்:கலெக்டர் சி.அ.ராமன், தகவல்

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      வேலூர்

வேலூர்:மறைந்த  தமிழக முதல்வர் அம்மா அவர்கள் தலைமையிலான அரசு கடந்த ஐந்தரை ஆண்டுகள் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் சிறக்க பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தொட்டில் குழந்தை திட்டம் என்பது தமிழ்நாட்டில் இருந்து வந்த பெண் சிசு கொலையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் 1992 ஆம் ஆண்டு மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களால் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதன்முதலாக துவங்கப்பட்டது.பெண் குழந்தைகளை பொருளாதார சுமை என்று கருதும் பெற்றோர் அக்குழந்தைகளை சிசுக்கொலை செய்வது அல்லது பொது இடங்களில் விட்டு விட்டு செல்வது போன்ற செயல்கள் அதிக அளவில் இருந்து வந்தது. இதனை தடுத்திடவும் பல்வேறு சூழ்நிலைகளில் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் அனாதையாக முட்புதர், குப்பை தொட்டிகளில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங்குழந்தைகள் தூக்கி வீசப்படுகின்றன. அந்த குழந்தைகளை மீட்டு அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் தொட்டில்கள் வைக்கப்பட்டன. பெண் குழந்தைகளை இத்தொட்டிலில் விட்டு சென்றால் இக்குழந்தைகளை தமிழக அரசு தொட்டில் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் வளர்த்தெடுத்து அவர்களின் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்கிறது.  அதனடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2007 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 200 குழந்தைகள் வரப்பெற்று பராமரிக்கப்பட்டு, பின்னர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ளுசுனுPளு (சொசைட்டி பார் ரூரல் டெவலப்மெண்ட் புரமோஷன் சர்வீசஸ் - திருப்பத்தூர்) சிறப்பு தத்தெடுப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இதில் 134 குழந்தைகள் தகுதிவாய்ந்த பெற்றோரிடம் தத்து கொடுக்கப்பட்டுள்ளன. இதில் வெளி நாடு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளி நாட்டினருக்கு 8 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை, பால் பவுடர், மருந்து பொருட்கள், நாப்கின் உள்பட பல பொருட்கள் வழங்கப்படுகின்றன. தொட்டில் குழந்தை திட்டத்திற்காக தமிழக அரசு பராமரிப்பு நிதியுதவியாக வேலூர் மாவட்டத்திலுள்ள ளுசுனுPளு (சொசைட்டி பார் ரூரல் டெவலப்மெண்ட் புரமோஷன் சர்வீசஸ்) என்கிற தொண்டு நிறுவனத்திற்கு 2011-12 ஆம் நிதியாண்டில் ரூ.6,12,900-ம், 2012-13 ஆம் நிதியாண்டில் ரூ.6,12,900-ம், 2013-14 ஆம் நிதியாண்டில் ரூ.3,06,450-ம், 2014-15 ஆம் நிதியாண்டில் ரூ.13,03,650-ம், 2015-16 ஆம் நிதியாண்டில் ரூ.12,60,450-ம் ஆக மொத்தம் 2011 முதல் 2016 வரை ரூ.40 இலட்சத்து 96 ஆயிரத்து 350- நிதியுதவி ஒதுக்கி இத்திட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பாக வளர்ந்து வருகின்றனர் என்று கலெக்டர் சி.அ.ராமன்,  தெரிவித்தார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: