முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா மதுரையில் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை இனிப்பு - அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      மதுரை
Image Unavailable

  மதுரை, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரையில் அவரது உருவசிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து இனிப்பு - அசைவ அன்னதானம் வழங்கி கொண்டாடினர். அ.தி.மு.க.நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 100 - வது ஆண்டு பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரால் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவசிலைக்கு அ.தி.மு.க.வினர் மட்டுமல்ல பல்வேறு கட்சியினரும், இயக்கத்தினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அரசு மருத்துவமனை அருகே பனகல்சாலையில் உள்ள மாநகர் மாவட்ட கமிட்டி அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் உருவபடம் அலங்கரிக்கப்பட்டு அந்த படத்திற்கு அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டியன் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து கே.கே.நகர் ஆர்ச் அருகே உள்ள எம்.ஜி.ஆர் உருவசிலைக்கு அவைத்தலைவர் புதூர்துரைப்பாண்டியன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அந்த இடத்தில் மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றத்தின் சார்பில் இனிப்பு மற்றும் அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தை முன்னாள் மண்டல தலைவர் பெ.சாலைமுத்து வழங்கி தொடங்கி வைத்தார். மாநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் இனிப்புகளும், இலவச வேஷ்டி, சேலைகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.சரவணன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன், மாவட்ட கழக நிர்வாகிகள் சி.தங்கம், வில்லாபுரம் ஜெ.ராஜா, எல்லீஸ்நகர் ஏ.இந்திரா, பகுதி கழக செயலாளர்கள் அண்ணாநகர் எம்.என்.முருகன், வி.கே.எஸ்.மாரிச்சாமி, முத்திருளாண்டி, பைக்காரா கருப்புசாமி, எம்.எஸ்.செந்தில்குமார், தளபதி ஆர்.மாரியப்பன், பி.எஸ்.கண்ணன், அணிசெயலாளர்கள் எஸ்.டி.ஜெயபாலன், கா.டேவிட் அண்ணாத்துரை,ஷ.ராஜலிங்கம், பெ.இந்திராணி, ஏ.ராஜூவ்காந்தி, புதூர் சுந்தரா, எம்.ஜி.ஆர்.மன்ற நிர்வாகிகள் வி.கே.சாமி, டி.எஸ்.பி.முத்துசாமி, பி.எஸ்.முருகன், தனுசுலாஸ் மற்றும் முத்துமுருகன், பரமேஸ்வரன், ஆட்டோ விஜயன், பார்த்தசாரதி, சண்முகவள்ளி, கண்ணகி பாஸ்கரன், சக்தி மோகன், செழியன், வழக்கறிஞர் அசோகன், புதூர் அபுதாகீர், எஸ்.போஸ், ஏ.முத்துச்சாமி, கார்த்திக் முனியசாமி, சுகந்தி அசோக், கலைச்செல்வம், புதூர் இளங்கோ, எம்.கல்யாணி, பி.புஷ்பா, சுகுணா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் எம்.ஜி.ஆரின் 100 - வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அ.தி.மு.க நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.முத்துராமலிங்கம், கே.தமிழரசன், எம்.வி.கருப்பையா, மாவட்ட நிர்வாகிகள் எஸ்.என்.ராஜேந்திரன், பி.அய்யப்பன், அம்பலம், பஞ்சவர்ணம், யு.பி.ஆர்.பஞ்சம்மாள், முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.ஜெயராமன், சிறுபான்மை பிரிவு மாநில பொருளாளர் ஜான்மகேந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், துணை செயலாளர் நிலையூர் முருகன் மற்றும் கல்யாண சுந்தரம், முத்துகுமார், எஸ்.முனியாண்டி, பன்னீர்செல்வம், கருத்தகண்ணன், வி.எஸ்.பூமிபாலன், ஐ.பி.எஸ்.பாலமுருகன், ஓம்.கே.சந்திரன், அன்பழகன், ஆண்டிச்சாமி, தமிழழகன், பி.ஏ.வீரமணி, கீழக்குயில்குடி பாண்டி, எஸ்.எஸ்.மனோகரன், அக்பர் அலி, தக்கார் பாண்டி, கே.முருகேசன், குதிரை குத்தி மோகன், எஸ்.முருகன், அய்யர்பங்களா ராமர், பாசறை செல்வம், காசிமாயன், சுரேஷ்பாபு, பொன்முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago