எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாணவர்கள், தேர்வு நடக்கும் காலங்களில் வழக்கத்திற்கு மாறான மனநிலையில் இருப்பார்கள். எப்போதையும் விட அதிக அன இறுக்கம், குறைவான தூக்கம், அதிக நேரம் படிப்பு என்று ஒருவித பதட்டத்தோடு காணப்படுவார்கள்.
உண்ணக்கூடாதது
இப்படி குறைவான தூக்கம், கூடுதலான மன இறுக்கம் இவை உடலில் செரிமானத் தன்மையை பாதிக்கிறது. எனவே இது போன்ற வேளைகளில் கடினமான உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. அதிக உணவை, கடின உணவை உண்ணும் போது வயிற்றுக்கு அதிக ரத்தம் பாய்வதால் மூளையின் செயல்திறன் பாதிப்படைகிறது. எனவே, எண்ணெய் பதார்த்தங்களை தொடக்கூடாது. காரம், மசாலாக்கள் அதிகமான உணவுகளில் கை வைக்கக்கூடாது. குறிப்பாக நிலக்கடலை உண்பதை தவிர்க்க வேண்டும். அதிக தாகத்தை உருவாக்கும் இட்லி, தோசைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக புளிப்பு உள்ள தயிர் தவிர்க்கப்பட வேண்டும்.
எடுத்துக்கொள்ள வேண்டியவை
காலையில் சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, தர்பூசணி இவற்றின் சாறுகளில் தேன் கலந்து குடிக்கலாம். அதன்பின் சத்துமாவு, கஞ்சி, ஓட்ஸ், கம்பு, ராகி, கோதுமை, அரிசி இவற்றில் ஏதாவது ஒன்றின் கஞ்சியை அருந்தலாம். மதியம் பருப்பு, கீரை இவற்றை வேகவைத்து கடைந்து சாதத்துடன் சேர்த்து உண்ணலாம். இரவு வேளை வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள் பழங்களின் கலவையை (சாலட்) உண்ணலாம். படிக்கும் வேளைகளில் தேவைப்பட்டால் உலர் திராட்சை எடுத்துக்கொள்ளலாம். பேரீச்சம்பழம், பாதாம் பருப்பின் பொடியும் கலந்து உண்ணலாம். இவைகள் எளிதாக செரிமானம் ஆகும். அதே வேளையில் மூளைக்கு வேண்டிய சத்துக்களை கொடுக்கும்.
பதட்டம் குறைய
தேர்வு வேளைகளில் ஒருவித பதட்டமும், பயமும் மனதில் இருக்கும். இதை குறைக்கவும், மனம் அமைதியாக செயல்படவும், நரம்பு மண்டலங்கள் சிறப்பாக இயங்கவும். மூளைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கவும், நாடி சுத்தி பிராணயாமம் மூன்று நிமிடம், தினமும் இரண்டு வேளை செய்யலாம். ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக படித்தப்பின் ஐந்து நிமிட இடைவேளை எடுத்துக்கொண்டு, ஒரு சின்ன நடை போடலாம், குதிக்கலாம். சூரிய நமஸ்காரம் செய்யலாம் அல்லது தண்டால் செய்யலாம். இவைகள் உடலின் ரத்த ஓட்டம்.
சிறப்பாக செயல்பட....
ஒவ்வொரு முறையும் படிக்க அமரும் முன் முகம் கை கால்களைக் கழுவி துடைத்து விட்டு செல்ல வேண்டும். இதுவும் உடலுக்கும், மூளைக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அப்போது நரம்பு மண்டலங்கள் உற்சாகமடையும். மன ஒருமைப்பாடு, நினைவுத் திறன் கூடும். தேர்வு நேரத்தில் இப்படி நேரத்தை வீணாக்கலாமா என்று தோன்றலாம். நாம் செலவு செய்யும் இந்த சில நிமிடங்கள் நிச்சயமாக படிக்கும் திறனை மேம்படுத்தும்.
தேர்வு எழுதச் செல்லும் வேளையிலே
தேர்வு எழுதச் செல்லும் போது, பதட்டமும், இதயத்தின் படபடப்பும் கூடும். சிலருக்கு இந்த பதட்டம் கூடுதலாகவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கலாம். எல்லாம் நன்றாக படித்து விட்டோமா? தெரிந்த கேள்விகள் வருமா? பதில் நன்றாக எழுத முடியுமா? மதிப்பெண்கள் என்னவாகுமோ? என்ற எண்ணம் மேலோங்கும். எது வந்தாலும் வரட்டும் எதிர்கொள்வேன், வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அப்போது யாவும் நல்லபடியாக நடக்கும். வெற்றி நிச்சயம். உங்கள் வெற்றிக்கும் உயர்வான எதிர்காலத்திற்கும் எமது அன்பான வாழ்த்துக்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
தக்காளி உருளைக்கிழங்கு![]() 39 sec ago |
மீல்மேக்கர் கிரேவி![]() 3 days 22 min ago |
மட்டர் பன்னீர் மசாலா1 week 48 min ago |
-
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழு கூட்டம்
09 Jun 2023சென்னை : முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
-
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஏஐ ஆணை மணந்தார் அமெரிக்க பெண்..!
09 Jun 2023நியூயார்க் : செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஏஐ ஆணை நியூயார்க்கை சேர்ந்த பெண் திருமணம் செய்திருப்பது இணையத்தில் பேசும்பொருளாகியுள்ளது.
-
ரஹானே-ஷர்துல் ஆட்டத்தால் பாலோ-ஆன் தவிர்ப்பு: ஆஸ்திரேலியாவின் பிடியில் இருந்து தப்புமா இந்தியா..?
09 Jun 2023லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாம் நாள் ஆட்டத்தில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
-
கடந்த ஒரு மாதமாக தேனி,மேகமலைக்கு சுற்றுலா செல்வதற்கான தடை நீக்கம்
09 Jun 2023தேனி : தேனி, மேகமலைக்கு சுற்றுலா செல்வதற்கு கடந்த ஒரு மாதமாக விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
அகதிகள் மசோதா திருத்த சட்டம் குறித்து ஜப்பான் பாராளுமன்றத்தில் கடும் அமளி : எம்.பி.க்கள் இடையே கைகலப்பு
10 Jun 2023டோக்கியோ : ஜப்பான் பாராளுமன்றத்தில் கடந்த வியாழன் அன்று, அகதிகள் மசோதா திருத்த சட்டம் நிறைவேற்றபட்ட போது எம்.பி.க்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை
09 Jun 2023புதுடெல்லி, அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
-
சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்: ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை பாராட்டிய விராட் கோலி..!
09 Jun 2023லண்டன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி வருகின்றன.
-
லபுசேன் தூக்கத்தை கலைத்த முகமது சிராஜ்
09 Jun 2023இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இந்தியாலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
-
சமீபகாலமாக சிறப்பான பேட்டிங் இல்லை: ரோகித் சர்மா அவுட் பற்றி சுனில் கவாஸ்கர் கருத்து
09 Jun 2023லண்டன் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழந்த விதம் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்
-
தமிழகம் உள்பட நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி
09 Jun 2023புதுடெல்லி : நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இதில் தமிழகத்துக்கு புதிதாக 3 மருத்துவ கல்லூரிகள் அமைய உள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 10-06-2023.
10 Jun 2023 -
அதிபர் ஜோபைடனை சந்தித்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் : உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர உறுதி
10 Jun 2023வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோபைடனை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
பெலாரஸ் நாட்டிற்கு அணு ஆயுதங்கள் ஜூலை மாதத்திற்குள் வழங்கப்படும் : ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு
10 Jun 2023மாஸ்கோ : பெலாரஸ் நாட்டிற்கு அணு ஆயுதங்கள் ஜூலை மாதத்திற்குள் வழங்கப்படும் என ரஷ்ய அதிபர் புடின் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரான்ஸ் அதிபர்
10 Jun 2023பாரீஸ் : கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை நேரில் சந்தித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது மனைவி ப
-
புதுப்பிக்கப்பட்ட தி.மு.க. இணையதளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
10 Jun 2023சென்னை : புதுப்பிக்கப்பட்ட தி.மு.க. இணையதளத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
தாமதமாக திறக்கப்படுவதால் சனிக்கிழமைகள்தோறும் பள்ளிகள் நடத்தப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
10 Jun 2023சென்னை : கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில், சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்
-
தற்கொலைக்கு தடை விதித்த வட கொரிய அதிபர் கிம்ஜாங் உன் : தேச துரோக குற்றமாக அறிவித்தார்
10 Jun 2023சியோல் : வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது நாட்டில் தற்கொலைக்கு தடை விதித்துள்ளார்.
-
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி : அமைச்சர் ராமச்சந்திரன் பெருமிதம்
10 Jun 2023நெல்லை : தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கை அளித்த கலைஞர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 1971-ம் ஆண்டில் உருவாக்கினார் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராம
-
ரயில் என்ஜின் டிரைவர்கள் பணியின்போது ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை
10 Jun 2023மதுரை : தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் பணியின் போது ரயில் என்ஜின் டிரைவர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை விதித்து அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
-
பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் கிடையாது : பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் அறிவிப்பு
10 Jun 2023சென்னை : பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் கிடையாது என்று பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் அறிவித்துள்ளது.
-
அண்ணா சதுக்கத்தில் புதிய பஸ் நிலையம் திறப்பு: தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்காதது ஏன்? - அமைச்சர் உதயநிதி விளக்கம்
10 Jun 2023சென்னை : சென்னை மெரினா கடற்கரை அருகில் அண்ணா சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தை நேற்று அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்.
-
எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன்
10 Jun 2023லண்டன் : இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
-
தேசிய விளையாட்டு போட்டிகளுக்கு தமிழக மாணவர்களை அனுப்பாததற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
10 Jun 2023சென்னை : தேசிய விளையாட்டு போட்டிகளுக்கு தமிழக மாணவர்களை அனுப்பாததற்கு அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் தொடங்கியது
10 Jun 2023திருச்சி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது.
-
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 15-ம் தேதி திறப்பு
10 Jun 2023திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆனி மாத பூஜைக்காக வருகிற 15-ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.