மாதவரம் அருகே விபத்தில் வாலிபர் பலி

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      சென்னை

சென்னை கொடுங்கையூர் வெங்கடேஷ்வரா நகர் 3குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி(27) இவர் மாத்தூர் 200அடி சாலை அருகே உள்ள தனியார் குடோன்(வோர்அவுஸ்) ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தின இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தார். மாதவரம் தபால்பெட்டி அருகே சென்றுக்கொண்டிருந்த போது வலைவில் இருந்த வேகதடையால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கிழே விழுந்தார். பலத்த காயங்கள் எற்பட்ட இவரை சிகிச்சைகாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடாசலபதி பரிதாபமாக செத்தார் இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பழனி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: