முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

புதன்கிழமை, 29 அக்டோபர் 2025      தமிழகம்
Kibini 2023-08-24

Source: provided

மைசூரு : கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 7 ஆயிரத்து 135 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபிலா ஆற்றின் குறுக்கே கபினி அணை அமைந்துள்ளது. இதேபோல், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. கர்நாடக மாநிலம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக இந்த ஆண்டு 4-வது முறையாக கே.ஆர்.எஸ். மற்றும் கபினி ஆகிய 2 அணைகளும் நிரம்பின. 6-வது நாளான நேற்று முன்தினமும் கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவான 124.80 அடியுடன் இருந்தது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் கே.ஆர்.எஸ். அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், நேற்று முன்தினம் வினாடிக்கு 4 ஆயிரத்து 328 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 6 ஆயிரத்து 392 கனஅடியாக அதிகரித்தது. இதேபோல், நேற்று முன்தினம் வினாடிக்கு 4 ஆயிரத்து 72 கனஅடியாக இருந்த தண்ணீர் திறப்பு நேற்று வினாடிக்கு 6 ஆயிரத்து 135 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.இதேபோல், கபினி அணைக்கு நேற்றுமுன்தினம் வினாடிக்கு ஆயிரத்து 851 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு ஆயிரத்து 278 கனஅடியாக குறைந்தது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு ஆயிரத்து 350 கனஅடி திறக்கப்பட்ட நிலையில் நேற்று காலை வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் கடந்த 3 தினங்களுக்கு முன்பு 2,283.84 ஆக இருந்தது. அதுவே நேற்று முன்தினம் சற்று குறைந்து 2,283.82 அடியாக இருந்தது. இந்தநிலையில், இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 7 ஆயிரத்து 135 கனஅடி நீர் தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.கடந்த 3 தினங்களுக்கு முன்பு வினாடிக்கு 5 ஆயிரத்து 420 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் மழை பொழிவு காரணமாக நேற்று முன்தினம் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து