தென்னேரியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொது கூட்டம்

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      காஞ்சிபுரம்
thenneri mgr

காஞ்சிபுரம்

 

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் வாலாஜாபாத் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தென்னேரியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொது கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் அக்ரி.நாகராஜன், தென்னேரி என்.எம்.வரதராஜீலு ஆகியோர் தலைமை தாங்கினார். காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், கழக அமைப்பு செயலாளர் மைதிலிதிருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர்கள் செந்தமிழன், வி.சோமசுந்தரம், ஸ்ரீபெருமந்தூர் சட்ட மன்ற உறுப்பினர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலியூர் தனசேகரன் அணைவரையும் வரவேற்றனர். நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர்கள் அனிதாகுப்புசாமி, ஆளூர்அப்துல்ஜலில் ஆகியோர் கலந்து கொண்டு அதிமுக அரசின் சிறந்த திட்டங்களை விளக்கி பேசினர். மேலும் முன்னாள் முதல்வரின் சாதனைகள் குறித்து பொது மக்களுக்கு விளக்கமளித்தனர். நிகழ்ச்சியில் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ்.எஸ்.சத்தியா உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: