முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நம்பியூரில் ‘அட்மா” திட்ட வட்டார தொழில் நுட்பக்குழுக் கூட்டம்

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2017      ஈரோடு

நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் ‘அட்மா” எனப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை - திட்டத்தின் வட்டார தொழில்நுட்ப குழுக் கூட்டம் நடைபெற்றது.

                          கூட்டத்திற்கு நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தலைமை வகித்தார். ‘அட்மா” திட்ட விவசாயிகள் ஆலோசனைக்குழுத் தலைவர் மணி (எ) பெருமாள் முன்னிலை வகித்தார்.

                          இக்கூட்டத்தில் வேளாண்மைத் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் புதிய பயிர் காப்பீட்டுத்திட்டம் , மண்மாதிரி எடுத்தல் , அம்மா பண்ணை மகளிர்குழு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. மேலும் கால்நடைத்துறை , தோட்டக்கலைத்துறை , வேளாண்மை பொறியியல் துறை , வேளாண்மை வணிகத்துறைகளின் திட்டங்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் எடுத்துக்கூறப்பட்டது.

                          இந்நிகழ்ச்சியில் கால்நடைஉதவி மருத்துவர் பிரபு ,  தோட்டக்கலை அலுவலர் ஜெகன் , வேளாண்மை பொறியியல்துறை உதவிப்பொறியாளர் வெள்ளியங்கிரி , வேளாண் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் மகேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

                          மேலும் , ‘அட்மா” உழவர் நண்பர்கள் , கூட்டுறவு சங்க செயலாளர்கள் , பூச்சிமருந்துக் கடைப் பிரதிநிதிகள் , முன்னோடி உழவர்கள் என 30 க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளைத் தெரிவித்தனர்.

                          நிறைவாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் கங்கா நன்றி கூறினார்.

                                நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் மணிகண்டன் , அருண்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago