கன்னியாகுமரி
கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், பணமில்லா பரிவர்த்தனை குறித்து பொது சேவைமைய கணினி ஊழியர்களுக்கு அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் பயிற்சி அளிக்கப்பட்டது.
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், மாவட்ட தகவலியல் அலுவலர் மற்றும் மாவட்ட மின் ஆளுமை மேலாளர் ஆகியோர்களால் வங்கிகளினால் வழங்கப்படும் மொபைல் அப்ளிகேசன் மூலம் பணமில்லா முறையில் பரிவர்த்தனை (ஊயளநடநளள வுசயளெயஉவழைn) செய்வது குறித்து கணினி ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
பொது சேவை மையங்களில் 20-01-2017 முதல் பயோமெட்ரிக் (டீழைஅநவசiஉ) முறையில் உள்ளீடு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் வர இருக்கும் மாதங்களில் ந) எந்திரம் மூலம் பணம் செலுத்தும் முறையும் பொது சேவை மையங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என பயிற்சியில் தெரிவிக்கப்பட்டது.
பயிற்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஸ்வநாதன், மாவட்ட மின் ஆளுமை மேலாளர் ஷாமிலி, வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.