முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கம் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் சூரிய ஆற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு: வனரோஜா எம்பி தொடங்கிவைக்கிறார்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      திருவண்ணாமலை

செங்கம் அடுத்த ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மத்திய அரசின் சூரியமித்ரா சூரிய ஆற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு தொடக்கவிழா இன்று நடைபெறுகிறது. இத்திட்டத்தின்கீழ் 30 மாணவ மாணவியருக்கு உணவு சீருடை மற்றும் தங்கும் இட வசதியுடன் இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்படும். தேசிய சூரியசக்தி நிறுவனத்தின் மூலமாக புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வழங்கியுள்ள தலைமை திட்டமான சூரியமித்ரா திட்டத்தின்கீழ் இ;நத திறன் மேம்பாட்டு பயிற்சி 90 நாட்களுக்கு அளிக்கப்படுகிறது.  இன்று நடைபெறும் தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் அக்ரி.வெங்கடாஜலபதி தலைமை தாங்குகிறார். டியுவிரிஹின்லேன்ட் மேலாளர் மனோஜ் செயல்மேலாளர் பூபதி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள் விழாவில் சிறப்பு அழைப்பளராக திருவண்ணாமலை தொகுதி எம்பி வனரோஜா கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி பயிற்சி வகுப்பினை தொடங்கிவைக்கிறார் இந்த பயிற்சி வகுப்பு பற்றி கல்லூரி தலைவர் அக்ரி வெங்கடாஜலபதி கூறுகையில் மத்திய அரசு சூரிய சக்தி உற்பத்தி திறனை 1லட்சம் கோடி வாட்ஸ் என்ற அளவை 2022ம் ஆண்டுக்குள் அடைவதாக அறிவித்துள்ளது தேசிய சூரியசக்தி நிறுவனம் சூலமாக புதிய மற்றும் புதுப்பிக்கதக்க எரிசக்தி அமைச்சகம் தலைமை திட்டமாக இந்த பயிற்சியை அறிவித்துள்ளது இதன் மூலம் சூரிய ஆற்றல் சாதனங்களை நிறுவுதல் செயல்பாடுகள் விற்பனை மற்றும் பராமரிப்பு திறன் வழங்குதல் அதிக தொழில் முனைவோரை உருவாக்குதல் ஆகும். இதில் தற்போது 30 மாணவர்கள் சேர்க்கப்பட்டு 90 நாள் இலவசபயிற்சி உணவு சீறுடை மற்றும் தங்குமிட வசதியுடன் அளிக்கப்படுகிறது. இதில் 70சதவிகிதம் செயல்முறை கல்வியும் 30சதவீதம் வகுப்பு கல்வியும் நடத்தப்படும். இதன்மூலம் மத்தியஅரசு சான்றிதழ் பெற்று 100சதவிகித வேலை வாய்பினை அடையலாம் இந்த பயிற்சி வகுப்புகள் 18 வயது முதல் 30 வயதுடைய ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த மாணவ மாணவிகள் சேரலாம் தொடர்ந்து இத்திட்டத்தில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் இந்த வாய்பினை மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் அக்ரி வெங்கடாஜலபதி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்