தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்:கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2017      தர்மபுரி
5

தருமபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர்  கே. விவேகானந்தன், தலைமையில் நேற்று நடைபெற்றது.   வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல், வேளாண் அறிவியல் மையம், கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மை விற்பனைத்துறை மூலம் விவசாயிகள் பார்வையிடும் வண்ணம் கருத்துக்கண்காட்சியை பார்வையிட்டு பின்னர் கலெக்டர்  தெரிவித்ததாவது :-தருமபுரி மாவட்டத்தில் மானாவாரி பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யும் மாவட்டம் ஆகும்.  தொடர்ந்து வடகிழக்கு பருவமழை குறைவின் காரணமாக பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டது. விவசாயிகளின் பல்வேறு பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டதைக் குறித்து அளிக்கப்பட்ட கோரிக்கையின் தொடர்பாக அரசு வறட்சி மாநிலமாக அறிவித்ததற்காக நன்றி தெரிவிக்கப்பட்டது. வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறை ஒருங்கிணைந்து கண்காணித்து வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் பால் பணம் பட்டுவாடா விரைவில் ரொக்கமாக வழங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும். விவசாயிகளின் நேரத்தை வீணாகாமல் இருப்பதற்கு வங்கிகளில் பண பரிவர்த்தனை எளிமையாக்க வேண்டும். மேலும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவிலிருந்து விரைவில் பணம் கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை வைத்தனர்.                நமது மாவட்டத்தில் உள்ள  விவசாயிகளின் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்ற பயிர் கடன் மற்றும் தேசிய மையமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளில் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடி செய்தவற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. கால்நடைகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் தீவனங்கள் வழங்க வேண்டும். தீ மற்றும் பல்வேறு காரணங்களினால் பாதிக்கப்படும் மரங்களை வனத்துறையின் மூலம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காப்பாற்ற வேண்டும்.தருமபுரி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் படிப்படியாக வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறையின் மூலம் 100 சதவீதம் கணக்கெடுப்பதற்கு அறிவுறுத்தப்பட்டது.  ஒவ்வொரு வியாழக்கிழமை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் நடைபெறும் கணக்கெடுப்பில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைபாடுகள் குறித்து தெரிவிக்கலாம் என்றார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்   திரு அ. சங்கர், வேளாண்மை இணை இயக்குநர் (பொ)  சேனாதிபதி, சிப்காட் பொது மேலாளர்                பஷீர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)                ரா.ரா. சுசீலா, தனி அலுவலர், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை துர்க்காமூர்த்தி, தனி அலுவலர், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை கவிதா, முன்னோடி வங்கி மேலாளர் திரு முத்தரசு, வருவாய் கோட்ட அலுவலர், அரூர்          . கவிதா, வருவாய் கோட்ட அலுவலர், தருமபுரி  ராமமூர்த்தி, உதவி பொது மேலாளர், நபார்டு  பார்த்தசாரதி, ளாண்மைத்துறை அலுவலர்களும், சகோதரத்துறை அலுவலர்களும், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: