காவல்துறை,பொதுமக்கள் கபடி:போட்டிகள்: ஏ.எஸ்பி பரிசளிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      வேலூர்
Dt 30   AKM  POTO 01

அரக்கோணத்தில் காவல்துறை, பொதுமக்கள் கபடி போட்டியில் வென்றவர்களுக்கு ஏ.எஸ்பி சக்திகணேஷ் பரிசளித்தார். இது குறித்து விவரம் வருமாறு.   வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரம், பழைய பேருந்து நிலையத்தின் அருகில் சிஎஸ்ஐ சென்ட்ரல் மேனிலைபள்ளி உள்ளது. இந்த பள்ளி விளையாட்டு மைதானத்தில் காவல்துறை பொதுமக்கள் கபடி போட்டிகள் நேற்று காலை நடைபெற்றது. போலிஸ், ஊர்காவல் படை மற்றும் பொதுமக்கள் சார்பில் என நான்கு அணிகள் பங்கு கொண்டன.   இப்போட்டிகளை பாணாவரம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தொடங்கி வைத்தார். ஏசுபாதம் தலைமையிலான ஊர்காவல் படையினர் முதல்இடம் பிடித்து பரிசு கோப்பை வென்றனர். இப்பரிசை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட துணை கண்காணிப்பாளர் சக்திகணேஷ் வழங்கினார்.     மேலும், இரண்டாம் இடத்தை பிடித்த காவனூர் டாக்டர் மில்லர் அணிக்கும், மூன்றாம் இடத்தை பிடித்த காவல்துறை அணிக்கும், நான்காம் இடம் பிடித்த பொதுமக்கள் அணிக்கும் பரிசுகளை வழங்கி பேசினார். இந்த விளையாட்டு போட்டிகளை உதவி ஆய்வாளர்கள் பழனிசாமி, பிரதாபன் மற்றும் ஊர்காவல் படை கமாண்டர் பாஸ்கர், ஆகியோர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: