வெளிப்படைத்தன்மையை கொண்டுவர அரசியல் கட்சிகள் இனி ரொக்கமாக ரூ.2000 மட்டுமே நன்கொடையாக பெற முடியும்

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2017      அரசியல்
2000rs(N)

புதுடெல்லி  - வெளிப்படைத்தன்மையை கொண்டுவர, அரசியல் கட்சிகள் இனி ரொக்கமாக ரூ.2000 மட்டுமே நன்கொடையாக பெற முடியும் என பட்ஜெட் தாக்கல் செய்த நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

வெளிப்படைத்தன்மைக்காக...
அரசியல் கட்சிகளுக்கான நன்கொடையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நடவடிக்கையாக அரசியல் கட்சிகள் இனி ரொக்கமாக ரூ.2000 மட்டுமே நன்கொடையாக பெற முடியும் என நிதிஅமைச்சர்அருண் ஜெட்லி கூறிஉள்ளார்.

ரூ.2000 மட்டுமே ...
“அரசியல் கட்சிகள் பெயர் தெரிவிக்காதவர்களிடம் இருந்து நிதி பெற்று வருகிறது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கப்படுவதில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவர, அரசியல் கட்சிகள் இனி ரொக்கமாக ரூ.2000 மட்டுமே நன்கொடையாக பெற முடியும்,” என்றார். அதேவேளையில் அரசியல் கட்சிகள் காசோலை மூலமாகவோ டிஜிட்டல் பரிவர்த்தனையின் மூலமாகவோ நன்கொடை பெற தடை எதுவும் கிடையாது. அரசியல் கட்சிகள் காசோலைகள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் நன்கொடை பெறலாம், அது ஆர்பிஐயை பொறுத்தது. தேர்தல் பத்திரங்கள் வெளியிட ரிசர்வ் வங்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முன்மொழியப்பட்டது எனவும் அருண் ஜெட்லி கூறிஉள்ளார்.

வருமானவரி கணக்கு
திருத்தமானது அனைத்து கட்சிகளும் குறிப்பிட்ட காலத்திற்குள் வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதை உறுதிசெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுநாள் வரையில் அரசியல் கட்சிகள் ரொக்கமாக ரூ.20,000 வரை நன்கொடை பெறலாம் என்ற நடைமுறை இருந்தது.

புகார்கள்
சமீபத்திய நாட்களில் அரசியல் கட்சிகளுக்கு வரும் பணம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையானது வலுத்து வருகிறது. உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு தடை செய்தபோது, பழைய நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யவும், மாற்றிக்கொள்ளவும் வழிமுறைகளை அறிவித்தார். இந்த ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதிக்கப்பட்டது. எனினும் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளை (பழைய நோட்டுகள் உள்பட) வங்கிகளில் செலுத்த எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படாததுடன், அவற்றுக்கு வருமான வரி விலக்கும் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் மூலம் ஏராளமான கருப்பு பணம் மாற்றக்கூடும் என புகார் எழுந்தது.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்: