கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2017      கடலூர்
Feb 06-n

கடலூர்.

 

கடலூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்ப்பு அரங்கத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ், தலைமையில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டர் அவர்களிடம் நேரில் அளித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கென மனுக்கள் பெறுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு கலெக்டர் நேரில் சென்று மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்றார்.

 

மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மொத்தம் 316 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த இம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், கலெக்டர் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை மூலம் 2015-16 கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதன்மை மதிப்பெண் பெற்ற செல்லி என்.கீதாபிரியா, செல்வி ஆர்.ஜீவிதா மற்றும் செல்வி ஜி.ரசிகா ஆகிய 3 மாணவியர்களுக்கு ரூ.9,000- மதிப்பிலான காசோலைகளையும், பாராட்டுச்சான்றிதழ்களையும் வழங்கினார்.இக்குறைகேட்புக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோவிந்தன், மாவட்ட வழங்கல் அலுவலர் தங்கவேலு உட்பட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்: