முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டாலினுக்கு ராதிகா சரத்குமார் பதிலடி

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2017      அரசியல்
Image Unavailable

சென்னை  - அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  பொதுச் செயலாளர் சசிகலா, அரசியல் அனுபவம் வாய்ந்தவர் என்பதை எதிர்காலம் நிச்சயம் நிரூபிக்கும் என்று ஸ்டாலினுக்கு  ராதிகா சரத்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.  அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ள  பொதுச் செயலாளர் சசிகலா, முதலமைச்சர் பதவியை ஏதிர்பார்த்துள்ள நிலையில், மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள  ராதிகா சரத்குமார், மு.க.ஸ்டாலினுக்கு, கடந்தகால அரசியல் வரலாற்றை நினைவுபடுத்த விரும்புவதாகவும், சசிகலா முதலமைச்சராவதில் எந்த விதிமுறை குறுக்கீடும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலினின் பொய்ப் பிரச்சாரம் அபத்தமானது என்றும், சசிகலா முதலமைச்சராவதை யாராலும் தடுக்கமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 6 முறை முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளார் - அப்போது அருகில் இருந்து கட்சி மற்றும் ஆட்சி எப்படி நடத்தப்படுகிறது என்பதை நன்கு அறிந்தவர் சசிகலா என்றும், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை எப்படி வழிநடத்தவேண்டும் போன்றவற்றையெல்லாம் தெளிவாக தெரிந்து வைத்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார். அரசியல் அனுபவம் வாய்ந்தவர் சசிகலா என்பதை, எதிர்காலம் நிச்சயம் நிரூபிக்கும் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள  ராதிகா, பொறுத்திருந்து பாருங்கள் என ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago