வள்ளலார் பன்னாட்டுக் கருத்தரங்கம்

வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2017      கடலூர்
DSC 0814

சிதம்பரம்.

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக யோகக் கல்வி மையமும், வடலூர் வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய வள்ளலார் பன்னாட்டுக் கருத்தரங்கு பிப்ரவரி 4 மற்றும் 5ம் தேதிகளில் பல்கலைக் கழக சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது. கருந்தரங்கைத் துவக்கி வைத்துப் பேசிய துணைவேந்தர்எஸ். மணியன் வள்ளலார் அருட்தொண்டு, ஆன்மீகத் தொண்டு மற்றும் சமயத்தொண்டினை அயராது ஆற்றி தனிமனித வளர்ச்சிக்கும், சமுதாய எழுச்சிக்கும் வித்திட்டார் எனக் கூறினார். தலைமை உரை ஆற்றிய பதிவாளர் கே. ஆறுமுகம் வள்ளலாரின் கருத்துக்கள் எக்காலத்திற்கும் பொருத்தமானவை என்றார்.

 

கல்விப்புல முதன்மையர் ஆர். பாபு, தவத்திரு ஊரன் அடிகள் மற்றும் தவத்திரு. சிவப்பிரகாச சுவாமிகள் பங்கேற்றனர். யோகக் கல்விமைய இயக்குனர் சுரேஷ் விழாவிற்கு வந்திருந்தவர்களை வரவேற்றார். விழாவில் வள்ளலார் கருத்துக்கள் சார்ந்த நூல்கள் மற்றும் குறுந்தகடுகள் வெளியிடப்பட்டன. இராஜா முத்தையா அரங்கில் வள்ளார் குறித்த நூல்கள், குறுந்தகடுகள் மற்றும் மூலிகை மருந்துகள் அடங்கிய கண்காட்சியும் நடைப்பெற்றது.

 

கருத்தரங்கில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களும், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்,கனடா ஆகிய நாடுகளைச் சார்ந்த சன்மார்க்க அன்பர்களும் பங்கேற்றனர். கருந்தரங்கை நிறைவு செய்யும் விதமாக பல்கலைக்கழக ஆட்சிமன்ற உறுப்பினர் மற்றும் இந்திய மொழியியல் புல முதன்மையர் திருவள்ளுவன் நிறைவுரையாற்றினார்.

 

கருத்தரங்கிற்குத் தேவையான ஏற்பாடுகளை பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், மேலும் வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவன அங்கத்தினர்கள் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு சிறப்பாகச் செய்திருந்தது.

 

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்: