முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரூப் - 1 தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்:கலெக்டர் வா.சம்பத் செயலர் சிவசுப்ரமணியன் தலைமையில் நடந்தது

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      சேலம்
Image Unavailable

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 19.02.2017 அன்று நடத்தப்படவுள்ள குரூப் - 1 தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (18.02.2017) கலெக்டர் வா.சம்பத், மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய சார்பு செயலர் சிவசுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் சேலம் மாவட்டத்தில் 19.02.2017 அன்று நடத்தப்படவுள்ள தமிழ்நாடு குடிமைப்பணிகள்-1 தேர்வு பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு 26 மையங்களில் 42 தேர்வு கூடங்களில் மொத்தம் 11,949 தேர்வாளர்கள் தேர்வு எழுதவுள்ளனர். தேர்வினை கண்காணிக்க 8 தலைமை கண்காணிப்பாளர்களும், துணை ஆட்சியர்கள் நிலையில் 8 பறக்கும்படை அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வு நேர்மையாக நடத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில் தேர்வு மையங்களில் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்வினை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும்படை, கண்காணிப்பு குழு, தலைமை கண்காணிப்பாளர் ஆகியோர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள் சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுபவர்களின் நுழைவு சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல், போன்ற பணிகளை சிறப்பான முறையில் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், தேர்வு மையங்களுக்கான முன்னேற்பாடு பணிகளை துணை ஆட்சியர்கள், காவல் துறை உயர் அலுவலர்கள், தீயணைப்புத்துறை, போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை மற்றும் இதர துறை அலுவலர்கள் தேவையான ஏற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது குறித்து இக்கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது. விதிமுறைகளை மீறும் தேர்வாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. என கலெக்டர் வா.சம்பத், தெரிவித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமார், சேலம் வருவாய் கோட்டாட்சியர் சி.விஜய்பாபு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பிரிவு அலுவலர் எட்வர்டு, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) மு.தமிழ்ராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் என்.செல்வம், மாவட்ட மேலாளர் (பொது) சக்திவேல், மாவட்ட மேலாளர் (நீதியியல்) குமரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்