சங்கரன்கோவில் அருகே மத்திய அரசின் இளைஞர் திறன் மேம்பாட்டுத் திட்ட விழா

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      திருநெல்வேலி

சங்கரன்கோவில்

 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் வளனார் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிரதமரின் இளைஞர் திறன் மேம்பாட்டுத் திட்டம் விழா நடைபெற்றது. விழாவிற்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமை வகித்தார். தென்கிழக்கு மண்டலச் செயலாளர் சுந்தர்தாஸ் விழாவை தொடங்கி வைத்தார். குருவிகுளம் வளனார் தொழிற் பயிற்சி நிலைய நிர்வாகி வியான்னிராஜ், ஈரோடு ஆறுதல் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கண்ணன், சங்கரன்கோவில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் இராஜேந்திரன், குருவிகுளம் காவல் ஆய்வாளர் காளியப்பன், வட்டார மருத்துவ அலுவலர் குருபாலா, தலைமை ஆசிரியர் மெட்டில் மேரி ஹெலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மறைமாவட்ட ஆயர் ஜுடுபால்ராஜ் மத்திய அரசின் சார்பில் பின்தங்கிய பகுதி மக்களுக்கு வழங்கப்படும் இலவச திட்டங்களான கணிணி பயிற்சி, பெண்களுக்கு தையல்பயிற்சி, எலக்ட்ரிசியன் பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்தார்.தொடர்ந்து அவர் பேசும் போது, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கண்ட கனவை நனவாக்கும் வகையில், பாரத பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதி மக்களுக்காக இறைவன் அளித்த வரப்பிரசாதம் இது. மேலும் இந்த பயிற்சிகளோடு சேர்த்து டிரைவிங் பயிற்சி மற்றும் உள் அலங்கார பயிற்சிகளும் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள் தாங்கள் படித்ததோடு மட்டுமல்லாது வெளியில் சென்று அருகில் உள்ளவர்களுக்கும் தெரிவித்தால் அதுவே சமூகத்திற்கு செய்யும் பேருதவியாக இருக்கும் என்று பேசினார். விழாவில் குருவிகுளம் கூட்டுறவு சங்க தலைவர் சீனிவாசன், அரசு ஒப்பந்தக்காரர் மாரியப்பன், இளைஞர் காங்கிரஸ் கண்ணன், குருவிகுளம் நகர செயலாளர் மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: