முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் எம்.ரவி குமார் பங்கேற்பு

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி.

 

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 01.03.2017 முதல் 12.03.2017 வரை நடைபெறவுள்ள மாசித் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் எம்.ரவி குமார், தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் எம்.ரவி குமார், பேசும்போது தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிசுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. எதிர்வரும் 01.03.2017 முதல் 12.03.2017 வரை மாசித் திருவிழா சிறப்பாக நடைபெற திருக்கோயிலுக்கு வருகைத்தரும் பக்தர்களுக்கு சிறப்பான முறையில் அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்படும். மாசித் திருவிழாவில் சுமார் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிதண்ணீர், சுகாதாரம், மின்சார வசதி, போக்குவரத்து வசதி ஆகியவற்றை முறையாக வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்ககப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுதிருவிழாவிற்கு வருகைத்தரும் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் கடல் பாதுகாப்பு வளையத்துடன் தீயணைப்புத்துறையினரும், உயிர் மீட்பு படகுடன் மீன்வளத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். திருவிழா காலம் மழைக்காலம் என்பதால் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறையின் மூலம் முன்னெற்றச்சரிக்கை நடவடிக்கையாக திருக்கோயில் வளாகத்தில் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை பெறும் வசதியுடன் மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், தீயணைப்புத்துறையினர் முழுமையாக தண்ணீர் நிரப்பப்பட்ட தீயணைப்பு ஊர்தியை தேவையான இடங்களில் தயார் நிலையில் வைக்கப்படும். பொது மக்கள் பாதுகாப்பாக சுவாமி தரிசனம் செய்ய காவல்துறை மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை மூலம் திருச்செந்தூர் பகுதியில் பழுதடைந்துள்ள சாலைகள் பழுது பார்க்கப்படும். பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளை பேரூராட்சி நிர்வாகம் மூலம் உடனடியாக சீர் செய்யப்படும். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் இந்நிகழ்ச்சிக்கு வருகைத்தர உள்ளதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார்.கலந்து கொண்டவர்கள்இக்கூட்டத்தில் சார் ஆட்சியர் தீபக்ஜேக்கப், மவாட்ட வருவாய் அலுவலர் (பொ) இராஜையா, திருச்செந்தூர் கோட்டாட்சியர் தியாகராஜன், இணை ஆணையர் (இந்து அறநிலையத்துறை) வரதராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago