முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரக்கோணதத்தில் மயானகொள்ளை உற்சவம்:நேர்த்தி கடன்செலுத்த மக்கள் குவிந்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2017      வேலூர்
Image Unavailable

அரக்கோணத்தில் நடைபெற்ற மயான கொள்ளை உற்சவத்தில் நேர்த்தி கடன் செலுத்த பல ஆயிரகணக்கானவர்கள் மக்கள் குவிந்தனர். இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரம், பழனிப்பேட்டையில் ஸ்ரீஅங்காள அம்மன் ஆலயம் உள்ளது. சக்திமிக்க அம்மன் ஆலயமானது நூற்றாண்டுகள் பழமை கொண்டது. இந்த ஆலயத்தில் அரக்கோணம் வட்ட பர்வத ராஜகுல (மீனவர்) முன்னேற்ற சங்க கமிட்டியின் சார்பில் 2017-ஆம் ஆண்டு மயான கொள்ளை உற்சவம் கடந்த ஒருவார காலமாக நடந்து வருகிறது. இந்த விழாவின் முக்கிய நாளான நேற்று பிற்பகலில் மயான கொள்ளை உற்சவம். இந்த உற்சவத்தன் போது அம்மன் உக்கரத்துடன் மயானம் நோக்கி புறப்பட்டார். அப்போது கூடியிருந்த பல ஆயிரகணக்கானவர்கள் அம்மன் மீது பணம், பொருட்கள் என வாரி இறைத்து தங்கள் நேர்த்தி கடன்களை நிறைவேற்றிக் கொண்டனர். மேலும் சிலர் முதுகுபுறம் அலகு குத்தி மூன்று, மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இழுத்து சென்றனர். பலர் காட்டேரி,காளி வேடமணிந்தும் தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றி கொண்டனர். இவ்விழாவானது மாவட்ட அளவில் மிகப் பெரிய விழாவாக வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணிகளுக்காக அதிக அளவிலான போலிசாரும், ஊர்காவல்படையினரும் ஈடுபடுத்தபட்டனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீஅங்காள அம்மன் ஆலய கமிட்டி நிர்வாக தலைவர் கணேசன், செயலாளர் செல்வம், இணை செயலாளர் சிதம்பரம், பொருளாளர் சிவாஜியும் இவர்களுக்கு உறுதுணையாக் இளைஞர் படையினரும் அதிக அளவில் ஈடுபட்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்