விழுப்புரம் மாவட்ட கால்நடைத்துறை மூலம் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 1 மார்ச் 2017      விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் ராமையாம்பாளையத்தில், கால்நடைத்துறை மூலம் 12வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தொடங்கி வைத்தார்.விழுப்புரம் மாவட்டத்தில் 12வது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப்பணி 6,72,700 கால்நடைகளுக்கு 126 குழுக்கள் அமைத்து 01.03.2017 முதல் 21.03.2017 வரை 21 நாட்களுக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி மேற்கொள்ளப்பட உள்ளது.கால மற்றும் வாய் நோயின் தன்மை மற்றும் இந்நோய் தாக்குதலினால் கறவை மாடுகளில் ஏற்படும் பொருளாதார இழப்பு குறித்து கலெக்டர்  பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.மேலும், விவசாயிகள் தங்களது பகுதியில் நடைபெறும் தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தங்களது கால்நடைகளுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென கலெக்டர் இல.சுப்பிரமணியன், கேட்டுக்கொண்டார்.இம்முகாமில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர்.மா.மாதேஸ்வரன், ஆவின் பொது மேலாளர் டாக்டர்.கே.கே.வசந்தகுமார், துணை பொது மேலாளர் ஆர்.கணேஷ், துணை இயக்குநர் டாக்டர்.எஸ்.குருவையா, உதவி இயக்குநர்கள் டாக்டர்.டி.மோகன், டாக்டர்.சி.அன்பழகன், டாக்டர்.தா.மோ.சாந்தி, ஆவின் மேலாளர் டாக்டர்.சி.சுப்புராஜ், கால்நடை உதவி மருத்துவர்கள் டாக்டர்.கே.நடராஜ், பி.சதானந்தம், எஸ்.பாலாஜி, ஆர்.சிவா, பி.ஜெனிபர், கே.அமர்ணா, கால்நடை ஆய்வாளர் வி.சுப்பிரமணியம் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ஏ.இராஜவேலு, வி.வெங்கடேசன், எஸ்.கேசவன், ஏ.பழனியம்மாள், எஸ்.அரிசந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: