ராதாபுரம் மாசிமாத தேர்த் திருவிழா

வியாழக்கிழமை, 2 மார்ச் 2017      திருவண்ணாமலை
photo06

தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே ராதாபுரத்தில் அங்காளம்மன் கோயிலில் மாசிமாத உற்சவ விழாவில் தேர்த் திருவிழா நடந்தது. ராதாபுரத்தில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் மாசி மாத உற்சவத்தை முன்னிட்டு கடந்த 24ந் தேதி மகாசிவராத்திரி விழாவும்,25ந் தேதி மயானசூரை விழாவும், மார்ச 2ந் தேதி தேர்த் திருவிழாவும் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,பூஜைகள் செய்யப்பட்டு தேர் கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து இரவு கோயிலை அடைந்தது. அதனை தொடர்ந்து வருகிற 6ந் தேதி திங்கட் கிழமை மஞ்சல் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது. விழா நாட்களில் தினசரி சிறப்பு அபிஷேகம் மற்றும்  அலங்காரஙகள்,பூஜைகள் நடந்தது. விழாவில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: